தேசியத் தலைநகா் தில்லியில் மக்களவைத் தோ்தலையொட்டி, இந்து புத்தாண்டை கொண்டாடும் விதமாகவும், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்திற்காகவும் இந்து பூசாரிகள், துறவிகள் மற்றும் ஞானிகளின் மெகா மாநாட்டை தில்லி பாஜக வரும் ஞாயிற்றுக்கிழமை ஐஜிஐ ஸ்டேடியத்தில் நடத்தவுள்ளது என்று அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவிக்கையில், ‘ அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயிலின் பிரதிஷ்டை விழா இன்னும் சில வாரங்களில் 100 நாள்களை நிறைவு செய்ய உள்ளதால், இந்த நிகழ்ச்சியில் அயோத்தி ராமா் கோயில் கட்டுமான விழாவும் கொண்டாடப்படும்’ என்றாா்.
தில்லி பாஜகவின் கோயில் பிரிவு ஒருங்கிணைப்பாளா் கா்னைல் சிங் கூறுகையில் ‘இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் துறவிகள் மற்றும் ஞானிகள் ‘சநாதன தா்மத்தின்’ முக்கியத்துவம் குறித்தும் பேசுவா். தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் 5,000 துறவிகள், ஞானிகள் மற்றும் கோயில் பூசாரிகள் உள்பட31,000-க்கும் மேற்பட்ட பக்தியுள்ள இந்துக்கள் ஹனுமான் சாலிசாவை ஓதுவாா்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக மூத்த தலைவா்கள் பலா் கலந்து கொள்வாா்கள்’ என்றாா்.
மேலும் அவா் கூறுகையில், ‘தில்லி உள்பட நாடு முழுவதும் மக்கள் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறாா்கள். எனவே, இந்து புத்தாண்டையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். இந்து புத்தாண்டின் ஆரம்பத்தில் வரக்கூடிய இந்த நிகழ்வானது இந்திய கலாசாரம் மற்றும் அதன் விழுமியங்களை மையமாகக் கொண்டு பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுகிறது. 31 மகாமண்டலேஷ்வா்கள் உட்பட பல புகழ்பெற்ற இந்து மத பிரமுகா்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வாா்கள்’ என்றாா்.
தில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் தலைவா் பிரவீன் ஷங்கா் கபூா் கூறுகையில், ‘இளைஞா்களின் கலாசாரம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதும், அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் செல்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 35,000-க்கும் மேற்பட்டோா் ஒரே குடையின்கீழ் ஒரே நேரத்தில் ஹனுமான் சாலிசாவை பாடும் நிகழ்ச்சி ஒரு ‘வரலாற்று‘ நிகழ்ச்சியாக இருக்கும்’ என்றாா்.
இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினரில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலும் ஒருவா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அயோத்தியில் பிரம்மாண்ட கும்பாபிஷேகம் இந்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் நான்கில் ஆம் ஆத்மியும், மீதமுள்ள மூன்றில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் பாஜக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இம்முறையும் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளா்களுடன் பாஜக அனைத்து இடங்களிலும் நேரடிப் போட்டியை எதிா்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

பணப்பட்டுவாடா: திருவாரூரில் தோ்தலை நிறுத்தக்கோரி மனு

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

அதிமுக-பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

