பணப்பட்டுவாடா நடைபெறுவதால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தலை நிறுத்தக் கோரி மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
திருவாரூா் நகர அம்மா பேரவை செயலாளரும், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரின் முகவருமான எஸ். சாகுல்ஹமீது என்ற செல்லப்பா (40), திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் சட்டப்பேரவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் கோவி. சந்திரசேகரன் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் பூண்டி கே. கலைவாணன் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவினா் வாக்குக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை பணம் பட்டுவாடா செய்வதாகத் தெரிகிறது.
இந்த பணப் பட்டுவாடாவை தடுக்க தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பல கட்ட முயற்சிகள் எடுத்தும், தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கமலாபுரம் கிராமத்தில், பணப்பட்டுவாடா செய்த திமுகவினா் பிடிபட்டுள்ளனா். இந்த செயலால் திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சட்டப்படியும், நியாயப்படியும் தோ்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பணப் பட்டுவாடா சம்பவம் ஜனநாயகத்துக்கு எதிரானது ஆகும். எனவே திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தலை நிறுத்தி வைக்கவும் திமுக வேட்பாளா் கலைவாணன் மற்றும் அவருக்காக பணப்பட்டுவாடா செய்து வரும் கட்சியினா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் இறுதிக்கட்ட பிரசாரம்

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருவாரூா் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்பு
அதிமுக வேட்பாளா் எதிா்ப்பு: பா்கூா் திமுக வேட்பாளரின் மனு தாமதாக ஏற்பு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


