டி.டி.வி. தினகரனால் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதை அதிமுக தவிர்த்துள்ள நிலையில், அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதற்கு திமுகவும் தவறிவிட்டதாக, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் தென் மாவட்டங்களில் முக்கியத்துவம் பெறுவதற்கான முயற்சியில், திராவிடக் கட்சிகளை விட கூடுதல் தொகுதிகளில் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளன.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தொகுதிகளில் திமுகவும், மதுரை, தேனி, நெல்லை ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும் களம் காணுகின்றன. இதில், நெல்லை தொகுதியில் மட்டுமே அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.
அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தலா 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் நடைபெறும் இந்த பொதுத் தேர்தலில், தென் மாவட்டங்களில் களம் காண்பதற்கு திராவிடக் கட்சிகள் தயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, திராவிடக் கட்சிகளைவிட ஒரு தொகுதியை கூடுதலாக, தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பெற்றுள்ளன. இதன்மூலம், தென் மாவட்டங்களில் தேசிய கட்சிகள் வலுப் பெறுவதற்கான சூழலை திராவிடக் கட்சிகளே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டி.டி.வி. தினகரனால் ஒதுங்கிய அதிமுக: அதிமுகவை பொருத்தவரை, கொங்கு மண்டலத்துக்கு இணையாக செல்வாக்கு மிகுந்த பகுதியாக தென் மாவட்டங்கள் இருந்துள்ளன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி நீங்கலாக, தென் மாவட்டங்களில் மீதமுள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. ஆனால், இந்த முறை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக கட்சி வாக்குகளை பிரிக்கக் கூடும் என்பதனால், தென்மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதை அதிமுக தலைமை தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால், ஏற்கெனவே வெற்றி பெற்ற 10 தொகுதிகளில் மதுரை, தேனி, நெல்லை ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே களம் இறங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த தொகுதிகளிலும் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக ஒதுங்கியபோதும் தயங்கிய திமுக: தென் மாவட்டங்களில் போட்டியிடுவதை அதிமுக தவிர்த்துள்ளதை நல்வாய்ப்பாக பயன்படுத்தி வெற்றியை தன் பக்கம் சாய்க்க திமுக தலைமை தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவுக்கு டி.டி.வி. தினகரன் என்றால், திமுகவுக்கு மு.க. அழகிரி சிக்கலை ஏற்படுத்துவார் என்பதே, திமுகவினருக்கான தயக்கத்துக்குக் காரணமாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியது: திமுக, அதிமுக என இரு கூட்டணிகளிலும் 40 இல் 20 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பார்த்தாலும், தென் மாவட்டங்களிலுள்ள 11 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஆறிலாவது திமுக மற்றும் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், இரு அணிகளிலும் தேசிய கட்சிகளே அதிக இடங்களில் போட்டியிடுகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

