‘என் உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று விட்டு அதிகாலை 3.30 மணியளவில் பெங்களூரு திரும்பிய நான், கே ஆர் புரம் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல ஓலா கார் அமர்த்திக் கொண்டேன். வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் கார் பஞ்சர் ஆகி விட்டது. கார் டயரை மாற்ற வேண்டியிருந்ததால் ஓட்டுநர் கதீர் ரஹ்மான், கார் தயாராக சற்று தாமதமாகலாம், நீங்கள் வேறு வாகனம் ஒன்றை அமர்த்திக் கொண்டு வீடு திரும்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவர் சொன்னபடியே, நானும் 10 நிமிடங்களில் வேறொரு வாகனத்தை அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு வந்த 10 நிமிடத்தில் எனக்கு கதீப்பிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நான் எனது மடிக்கணினி மற்றும் சில விலையுயர்ந்த எலெட்ரானிக் உபகரணங்களை வைத்திருந்த கைப்பையை அவரது காரிலேயே விட்டு வந்து விட்டதாகவும், திரும்ப வந்து அதை எடுத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். என் கைப்பை கிடைத்து விட்ட போதும், அதிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை தொலைக்கவிருந்த நிலையை எண்ணிக் கொஞ்டம் பதட்டமாகி விட்டேன் நான். அப்போதும், கதீப் என்னிடம் பதற்றமின்று வாருங்கள், நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் என்று என்னைச் சமாதானப்படுத்தி நான் அவரைச் சென்று அடைவதற்குள்ளாகப் பாதி வழியிலேயே என் கைப்பையை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார்.