இங்கே அந்த கஷ்டமெல்லாம் நேரலைன்னாலும், இங்கயும் ஒரு சின்ன பிரச்னை இருக்கு. குட்டி பொறந்ததுமே அன்பான அம்மாவா, குட்டியை நக்கி தன்னோட பாச உணர்வை வெளிப்படுத்தின மாய், என்ன காரணத்தாலயோ அதுக்குப் பாலூட்ட மறந்துட்டது. அது இயல்பான நிலைமை இல்லையே. ஏன்னா, மதர்குட்னா என்ன, குட்டி போட்டு பால் கொடுக்கக் கூடிய எந்த ஒரு உயிரிலுமே அம்மாக்களுக்கு இருக்கற ஸ்பெஷல் பண்பு அது, குட்டி பொறந்து மண்ணுல விழுந்த அடுத்த நிமிஷமே அம்மா, அதுக்கு பால் ஊட்ட ஆரம்பிச்சிடும். இங்க அது இன்னும் நடக்கல. இது என்னடா சோதனைன்னு உடனே மைசூர் ஜூவுக்கு ஃபோனைப் போட்டோம், அவங்க தான், சும்மா பயப்படாதீங்க, இப்படியும் சில நேரங்களில் ஆயிடறதுண்டு. அதனால பரவாயில்லை இப்போதைக்கு பொவைன் கொலஸ்ட்ரம் கொடுங்க குட்டிக்கு... கொஞ்ச நாள்ல சரியாயிடும்னு சொன்னாங்க.