இவர்களில் மற்ற அனைவருக்கும் திரைப்படப் பின்னணி இருக்கையில் ஆனந்த் குமார் மட்டுமே விதிவிலக்கானவர். அவருக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்துக்குப் பிறகு தான் அவரது வாழ்க்கை திரைப்படமானது. எனவே, சாமானிய இந்தியர் ஒருவர், தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி இன்று கூகுள் தேடலில் டாப் 10 ல் இடம்பெற்றிருப்பது மிகச்சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. தவிர, ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ ஐ டியில் இணைந்து பயிலும் விருப்பம் இருப்பின் அவர்களுக்குத் தனது பயிற்சி மையத்தின் மூலமாக இலவசப் பயிற்சி அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் ஆனந்த் குமார் என்பது வரவேற்கத்தக்க விஷயங்களில் ஒன்று.