அங்க போய் சேர்ந்துட்டேன். அங்க சேவாகிராம் ஆசிரமம் போனபோது கூட அது காந்தியோட ஆசிரமம்னு எனக்குத் தெரியாது. அனுப்பிச்சவரும் காந்தியோட பிள்ளைன்னு எனக்குத் தெரியாது. அங்க இருந்த போது என்ன வேலை பண்ணேன். எல்லாமே மேனுவல் வொர்க். எனக்கு ஆஃபீஸ் வொர்க் பிடிக்காதுன்னு தான அங்க போனேன். சரி, ஆஃபீஸ் வேலை பிடிக்காதுன்னா ஃபீல்டு வொர்க் பண்னுன்னு சொல்லிட்டாங்க. அங்க ஆசிரமத்துக்கு சொந்தமா பெரிய வயல் இருந்தது. சேவாகிராம ஆசிரமத்தை காந்திக்கு ஜம்னாலால் பஜாஜ் கொடுத்தார். பெரிய வாஸ்ட் லேண்ட் அதுல ஆசிரமத்தைக் கட்டி பின்னால பெரிய வயலோட கொடுத்தார். அங்க நான் காலைல எழுந்து வயலுக்குப் போயிடுவேன். 10 மணி வரைக்கும் வயல்ல வேலை பார்ப்பேன். அப்புறமா ஆசிரமத்துக்குத் திரும்ப வந்துடுவேன். அப்புறம் என்ன பண்றது? ஆஃபீஸ் வேலை பிடிக்காததுனால அங்க சும்மா உட்கார்ந்திருப்பேன். அப்போ, அங்க காந்திக்கு நிறைய கடிதங்கள் வரும். ஆனா, காந்தி தான் அப்போ இங்க இல்லையே, அவர் ஆஹாகான் பேலஸ்ல சிறை வைக்கப்பட்டிருந்தார். 1943 ஆம் வருஷத்தைப் பத்தி நான் சொல்லிண்டிருக்கேன். அப்போ தான் நான் சேவாகிராம் போனேன். காந்திய அப்போ வரைக்கும் நான் பார்த்ததே இல்லை. அப்போ காந்திக்கு வர்ற லெட்டர் எல்லாம் அவரைப் போய்ச் சேரக்கூடாதுன்னு வெள்ளைக்காரன் ஒரு ரூல் போட்டிருந்தான். அதனால அவருக்கு வர்ற லெட்டரெல்லாம் ஆசிரமத்துக்கு வந்துண்டிருந்தது. ஒருநாளைக்கு 30 லெட்டர் வரும். காந்தி ரெண்டு வருஷம் ஆஹாகான் பேலஸ்ல இருந்தார். அப்போ யோசிச்சுப் பாருங்கோ எத்தனை லெட்டர் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்திருக்கும்னு. அப்போ, என் வேலை என்ன தெரியுமா? வயல்ல இருந்து வந்ததுக்கப்புறம் ஆஃபீஸ்ல உட்காரனும். ஆஃபீஸ் வேலை எனக்குப் பிடிக்காது. அதனால அவங்களும் எனக்கு ஆஃபீஸ் வேலை கொடுக்கலை. அதுக்குப் பதிலா இந்த லெட்டரெல்லாம் வாங்கி பிரிச்சுப் பார்க்கனும். பார்த்துட்டு ஒவ்வொண்ணையும் மொழிவாரியா பிரிச்சி அடுக்கிடனும். தமிழ் தனியா, இந்தி தனியா, உருது தனியா, இங்லீஷ் தனியா. வெள்ளைக்காரன் கிட்ட இருந்து வந்தது தனியா, நிறைய லெட்டர்ஸ் வெளிநாட்டுல இருந்தும் வரும். காந்தியோட ஆட்டோகிராப் வேனும், ஃபோட்டோகிராப் வேணும்னு வரும். நாட்டுல இருக்கறவா எல்லாம் நாட்டைப்பத்தி பேசறதுக்கு நிறைய எழுதி இருப்பா. அதுக்கெல்லாம் காந்தி பதில் போடனும். ஆனா, அந்த லெட்டரெல்லாம் அவருக்குப் போய் சேரலை. ஆசிரமத்துலயே தான் இருக்கும். இதையே பார்த்துண்டு இருந்தேன். அந்த லெட்டர்ஸ் எல்லாம் பார்த்தோடனே தான் எனக்குத் தெரிய வந்தது இது காந்தியோட ஆசிரமம்னு. காந்தியோட செக்ரட்டரி ரொம்பப் பெரிய ஆள். மஹா தேவ் தேசாய்... அவரோட கம்பேர் பண்ணும் போது நானெல்லாம் ஆர்டினரி கிளெர்க். அவர் முன்னால் நான் தூசி. அவர் 1942 ஆம் வருஷம் ஆகஸ்டு 15 ஆம் தேதி இறந்துட்டார். நான் பிறந்தது 1922 ஆகஸ்டு 15. மஹாதேவ் தேசாய் ஆஹாகான் பேலஸ்லயே இறந்துட்டார். அவரை அரெஸ்ட் பண்ணி காந்தியோட அங்க கொண்டு போனது 1942 ஆகஸ்டு 9 ஆம் தேதி அன்னைக்குத்தான் வெள்ளையனே வெளியேறு போராட்டம். அதுக்காகத்தான் காந்தி, கஸ்தூர்பா காந்தி, மஹாதேவ் தேசாய் எல்லாரையும் கைது பண்ணி பிரிட்டிஷ்காரன் ஆஹாகான் பேலஸ்ல சிறை வைச்சான். அங்க போன ஒரே வாரத்துல தேசாய் இறந்துட்டார். அவர் போனது காந்திக்கு ரொம்ப மன வருத்தமாயிடுத்து. தேசாயை நினைச்சு காந்தி ரொம்ப கஷ்டப்பட்டார். ஏன்னா, அவரைப் போல ஒரு செக்ரட்டரி காந்திக்கு கிடைக்காது. இன்னும் 100 வருஷம் ஆனாலும் கிடைக்காது. அவ்வளவு நல்ல ஆளு அவர். இதனால அப்போலாம் பொழுதுவிடிஞ்சா காந்தி சோகமா இருப்பார். அதுக்கு ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அதே ஆஹாகான் பேலஸ்ல காந்தியோட வைஃப் கஸ்தூர்பா காந்தி செத்துப் போயிட்டாங்க. கஸ்தூர்பா காந்திக்கு ஒரு வியாதி வந்தது. அதுக்கு பென்சிலின் கொடுத்தா சரியா போயிடும்னு சொன்னா. அப்போ தான் பென்சிலின் புதுசா வந்திருக்கு வெளிநாட்டுல. தேவதாஸ் காந்தி லண்டன்ல இருந்து அந்த மருந்தை தன் அம்மாவுக்காக வரவழைச்சார். ஆனா, காந்தி அதை கொடுக்கப்படாதுன்னுட்டார். காந்தி பிலீவ்டு இன் நேச்சர் கியூர். அதைக் கொடுத்திருந்தா இன்னைக்கு பொழைச்சிருப்பா அவ. அதைக் கொடுக்காம விட்டுட்டா. எனக்கு வெளிநாட்டு மருந்தெல்லாம் பிடிக்காது. உள்நாட்டு மருந்து தான் வேணும் ஆயூர் வேதா வேணும், ஹோமியோபதி வேணும்னு சொல்லிட்டார். அதனால அவளும் செத்துப்போயிட்டா. இப்ப காந்தி ஒருத்தர் தான் இருக்கார்.