இது தவிர ஆட்டோவின் முன்புறக் கண்ணாடிப்பகுதியின் ரப்பர் மெட்டீரியலுக்காக பழைய செருப்புகளில் இருக்கும் ரப்பரை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன். இந்த மினி ஆட்டோவை இயக்க இரண்டு 12 வோல்ட் டி சி மோட்டாரைப் பயன்படுத்தி இருக்கிறேன். மொத்தம் 24 வோல்ட் மோட்டார் பவர் இதற்குப் போதும். பெரிய ஆட்டோக்களில் இருப்பதைப் போன்றே இதிலும் முன்புற ஹெட் லைட்டுகள், உட்புற லைட், பிரேக் வசதி, ஹார்ன் வசதி, முதலுதவிப் பெட்டி வசதி, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, சும்மா ஃபேன்ஸிக்காகவேனும் மீட்டர் பாக்ஸ் வசதி என ஒரு பெரிய ஆட்டோவுக்குண்டான அத்தனை அம்சங்களையும் நான் என் மினி ஆட்டோவிலும் உருவாக்கி வைத்திருக்கிறேன். ஆட்டோவில் செல்லும் போது என் குழந்தைகளுக்குச் சலிப்புத் தட்டக்கூடாது என்பதற்காக இதில் டிரைவர் ஷீட்டுக்கு அடியில் பென் டிரைவ் வசதியும், மெமரி கார்டு வசதியும் கூட செய்து வைத்திருக்கிறேன். ஆட்டோ ஓட்டும் போது பாட்டுக் கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டலாம் பாருங்கள், அதற்காகத்தான், அதோடு, இதை உருவாக்க அதிக செலவாகவில்லை, வீட்டிலிருக்கும் பழைய பிளாஸ்டிக் கண்டெய்னர் பாக்ஸைத்தான் இதற்காக உபயோகித்திருக்கிறேன்’ என்கிறார் அருண்குமார் புருஷோத்தமன்.