சில பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகளிலேயே 1 முதல் 150 வரை எண்களை மனப்பாடம் செய்யச் சொல்லி அடையாளம் காண்பிக்கச் சொல்கிறார்கள். சில பள்ளிகளில் யூகேஜி மாணவர்கள் 1 முதல் 50 வரை எண்களை, எழுத்தில் எழுதிக் காட்ட வேண்டுமாம். அதாவது ONE, TWO, THREE, FOUR, FIVE, SIX, SEVEN, EIGHT, என FIFTY வரை. யூ.கே.ஜி பருவத்தில் குழந்தைகள் இந்த எண்களை மனனம் செய்து மனதில் நிறுத்திக் கொள்வதையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதவேறு வேண்டும் என்கிறார்கள். 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு இது ஒருவிதமான சுமையின்றி வேறென்ன? முதலில் அந்தக் குழந்தைகளின் விரல்களில் அதற்கான பலமுண்டா என்று யோசிக்க வேண்டும். விளையும்போதே பயிர்களை உடனடி மரங்களாக்கும் முயற்சிதான் இது!