சில குழந்தைகள் கேட்கிறார்களாம்... நாங்கள் பாட்டி வீட்டுக்குச் செல்லத் தயார் தான். ஆனால் அவர்கள் அங்கிருந்தால் தானே? சில பாட்டி, தாத்தாக்கள் விடுமுறைக் காலங்கள் தோறும் மூன்று மாதங்கள், ஆறு மாதங்களென மகன் அல்லது மகளைப் பார்க்க வெளிநாடுகளுக்குப் பறந்து விடுகிறார்களே அப்போது நாங்கள் என்ன செய்வது? கிராமத்துப் பாட்டி, தாத்தா வீடுகளில் யார் இருக்கிறார்கள் இப்போது? வெறிச்சோடிய ஊரைக் கண்டு மொட்டு மொட்டென்று உட்கார்ந்திருக்க முடியுமா? கிராமத்தில் இருப்பவர்களுக்கோ விடுமுறைகள் தோறும் நகரத்தில் பொழுதைக் கழிக்க ஆசை. நகரத்தில் இருப்பவர்களோ பெரு நகரங்கள், மாநகரங்களில் இருக்கும் ரிஸார்ட்டுகளைத் தேடிக்கொண்டு டூர் போய் விடுகிறார்கள். பிறகெப்படி பாட்டி வீடுகளுக்குப் போய்ச் சீராடுவதாம்? என்று; அவர்கள் கேட்பது சரி தான். காலம் அப்படி மாறி விட்டது. இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம் ஆரம்பம் முதல் இதுவரை அளந்ததில் அதிதி தேவோ பவா கலாச்சாரத்துக்கும் பேயிங் கெஸ்ட், ரிஸார்ட் கலாச்சாரத்துக்குமான இடைவெளி என்னவென்று தெரிந்ததா?