நார்வேயைத் தொடர்ந்து ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன. இந்த தர வரிசைப் பட்டியலில் என்ன ஒரு சோகமென்றால் யூனிசெஃப் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மருந்துக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எதையும் காணோம். அப்படியானால் நமது ஆசியக் குழந்தைகளைப் பொறுத்த வரை இன்று வரையிலும் அவர்களது தேவைகள் எதுவும் சரி வர கவனிக்கப் படவில்லை என்பது நிஜமென்றாகிறது. ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளைப் பொறுத்தவரை மத்திய ஆசிய நாடான ‘துருக்கி’’. மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளான ‘ஜப்பான்’, ‘கொரியா’ உள்ளிட்டவை மட்டுமே இதில் இடம் பெற்றுள்ள ஆசிய நாடுகள் என திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியது தான். ஏனெனில் தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட நாடுகளாகப் பிற ஆசிய நாடுகள் இல்லை என்பதே இந்த தரவரிசைப் பட்டியலின் பொருள்.