தன்னுடைய அழகின் ரகசியம் மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகைகள் பெரும்பாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் சரும அழகை மெருகூட்டவும் பல்வேறு தயாரிப்புகளைப் பயன்படுத்துவது முதல் அறுவைச் சிகிச்சைகள் வரை செய்துகொள்கின்றனர். ஆனால் சில நடிகைகள் இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தி அழகுக்கு அழகு சேர்க்கின்றனர்.
அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, தன்னுடைய சரும அழகுக்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நான் சருமத்திற்கு, தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறேன், அது மட்டுமின்றி உணவுக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறேன். அதைவிட அழகுக்கு ஒரு சிறந்த பொருள் இல்லை. நான் மகாராஷ்டிர கடலோரப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள். அங்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவார்கள். சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களும் தங்களுடைய சருமத்திற்கு ஏற்ப பொருள்களை பயன்படுத்துவார்கள். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு மேஜிக். எனக்கு அது நன்றாக வேலை செய்தது" என்று கூறியுள்ளார்.
தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக லாரிக் அமிலம் நிறைந்தது. இது சருமத் தடையை வலுப்படுத்தவும் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் உதவுகிறது. வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு முகப்பரு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, அவரவர் சருமத்திற்கு ஏற்ப பயன்படுத்துவது நல்லது.
summary
Rani Mukerji only beauty secret is so simple for skin care
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க தென்னை விவசாயிகள் கோரிக்கை

ராணி முகர்ஜியின் அழகின் ரகசியம் இதுதான்!
பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


