ராணி முகர்ஜியின் அழகின் ரகசியம் இதுதான்!

ராணி முகர்ஜியின் சருமப் பராமரிப்பு...

தன்னுடைய அழகின் ரகசியம் மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சரும அழகுக்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

சருமத்திற்கு, தலைமுடிக்கு மட்டுமின்றி உணவிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதாகவும் அதைவிட சருமப் பராமரிப்புக்கு ஒரு சிறந்த பொருள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

"நான் மகாராஷ்டிர கடலோரப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள். அங்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவார்கள். சருமத்திற்கு மிகவும் நல்லது"

"கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு மேஜிக். எனக்கு அது நன்றாக வேலை செய்தது" என்று கூறியுள்ளார்.

எனினும் அவரவர் சருமத்திற்கேற்ப அழகு சாதனப் பொருள்களைத் தேர்வு செய்வது சிறந்தது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முகப்பு பக்கத்துக்கு...