ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எளிமையான மேக்அப் -யை விரும்புகிறேன்! அழகின் ரகசியம் பற்றி நடிகை ஷ்ரத்தா கபூர்

சருமப் பராமரிப்புகள், உடல் ஆரோக்கியத்துக்கான பழக்கவழக்கங்கள் குறித்து பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கூறியது...

Shraddha Kapoor

நடிகை ஷ்ரத்தா கபூர் - ANI

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:10 pm IST

அழகு என்பது ஒருவரின் தனித்துவத்தை மறைக்காமல் இருக்க வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கூறுகிறார்.

தங்கள் அழகின் ரகசியம் குறித்து பிரபலங்கள் பலரும் அவ்வப்போது நேர்காணல்களில், சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், தனது அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்துப் பேசியுள்ளார்.

"உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருக்க வேண்டும். அந்த விஷயத்தில் நான் எப்போதும் கவனத்தில் இருப்பேன். அதேபோல காலையில் எழுந்ததும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

அதற்காக காலையில் அதிக தண்ணீர் குடிப்பேன், தியானம் மற்றும் யோகா செய்கிறேன்" என்று கூறினார்.

அழகு குறித்து பேசுகையில், "அழகு என்பது ஒருவரின் தனித்துவத்தை மறைக்காமல் அதை அழகூட்டி வெளிப்படுத்த வேண்டும்.

கோடை காலத்தில் எளிமையான மேக்அப் - யை விரும்புகிறேன். எப்போதும் எளிமையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அந்தவகையில் கோடையில் மஸ்காரா, கன்சீலர், லிப் பாம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறேன்" என்று கூறினார்.

Summary

I prefer simple makeup: Actress Shraddha Kapoor on the secret of beauty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.