ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகை ஸ்ரீதேவி இறந்தது எப்படி? உண்மையை சொன்ன போனி கபூர்!

ஸ்ரீதேவி இறந்தது எப்படி? என்று அறிய உண்மை கண்டறியும் சோதனைகூட தனக்கு நடத்தப்பட்டதாக போனி கபூர் கூறியது பற்றி..

<P>22/10/2016 - MUMBAI: Bollywood Actor Sridevi during a musical play Mughal E Azam in Mumbai - PTI Photo. [Nation, Bollywood, Actress, Sridevi]</P>

நடிகை ஸ்ரீதேவி - Center-Center-Chennai

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:01 pm IST

நடிகை ஸ்ரீதேவி, குளியல்தொட்டியில் மூழ்கித்தான் இறந்தாரா? என்பது குறித்த விசாரணையின்போது, தான் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக போனி கபூர் கூறிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாள் என்பதாலோ என்னவோ, அவரைப் பற்றிய தகவல்கள் முழுவதும் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் போனி கபூரின் நேர்காணல்.

நடிகை ஸ்ரீதேவி, பிப்ரவரி 24, 2018 அன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துபை சென்றிருந்தபோது குளியல் தொட்டியில் மூழ்கி தன்னுடைய 54வது வயதில் காலமானார்.

அவரது மரணத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும், சுயநினைவை இழந்து, நீரில் மூழ்கியதே அவரது மரணத்திற்குக் காரணம் என்று துபையில் நடந்த விசாரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்தும், அந்த வழக்கு பல ஆண்டுகள் நீடித்தது குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.

துபை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ​​ஸ்ரீதேவியின் கணவர், தயாரிப்பாளர் போனி கபூர் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எதிர்கொண்ட விசாரணையின் விவரங்களை வெளியிட்ட போனி, தான் 'பொய் கண்டறியும் சோதனைக்கு'கூட உள்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

பல கட்ட விசாரணைக்குப் பிறகே, தான் குற்றமற்றவர் என்ற அறிவிப்பு துபை காவல்துறையிடமிருந்து எனக்குக் கிடைத்தது. இந்திய ஊடகங்களிடமிருந்து வந்த கடும் அழுத்தமும், விசாரணையை தீவிரப்படுத்த காரணமாக இருந்ததகாவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டதுடன், இறுதியில், ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகத்திற்கிடமான செயல் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்று போனி கபூர் கூறியிருக்கிறார்.

மேலும், உடல்கூராய்வு முதல், உடலைத் தாயகம் கொண்டுவந்து சடங்குகள் முடியும் வரை துபை அதிகாரிகள்தான் ஸ்ரீதேவி உடலைத் தங்கள் வசம் வைத்திருந்ததாகவும் போனி கபூர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி மரணத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி போனி கபூர் கூறுகையில், அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மோசமான உணவுப் பழக்கம் இருந்தது. அவர் உணவில் உப்பு அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில்தான் ஸ்ரீதேவி மரணம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Summary

How did Sridevi die? Even a truth-verification test was conducted – Boney Kapoor's interview goes viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.