டேஹ்ராடூன்: வீட்டிலிருந்து பணியாற்றுவது சலித்துவிட்டதா? இதோ மனிதர்களின் நடமாட்டமே இல்லாத மலைப்பிரதேசத்தில் உத்தரகண்ட் அரசு அமைத்திருக்கும் பணியிடங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்.
வீட்டிலிருந்தே பணியாற்றுவோருக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தரவும், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முடங்கிப் போயிருக்கும் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கவும் உத்தரகண்ட் சுற்றுலாத் துறை மேற்கொண்டிருக்கும் புதிய முயற்சிக்கு நிச்சயம் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலைப்பாங்கான பகுதிகளில், சில்லென்ற தட்பவெப்பத்தில், சுற்றிலும் பச்சைப்பசேலென்ற சோலைகள் நிறைந்த, தூய்மையான காற்று உங்கள் பணியிடத்தை சூழ்ந்துகொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
இந்த திட்டம் குறித்து உத்தரகண்ட் சுற்றுலாத் துறை செயலாளர் திலீப் ஜவால்கர் கூறுகையில், தற்போதிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டதே இந்த பணியிட சுற்றுலா. வீட்டிலிருந்தே பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த திட்டத்தை உத்தராகண்ட் சுற்றுலாத் துறை, ஜிம் கார்பெட், முசௌரி, கௌசனி, டேஹ்ராடூன், நைனிடால், அல்மோரா உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
பணியிட சுற்றுலாவுக்கு வருவோரின் நிதிநிலைக்கு ஏற்ற வகையில் இந்த திட்டம் வடிவமைத்துத் தரப்படுவதே இதன் சிறப்பம்சமாகும். சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் வரவேற்கும் வகையில், குறைந்தது 3 நாள்கள் உத்தராகண்டில் தங்கியிருப்போருக்கு அவர்களது செலவுக் கட்டணத்தில் ரூ.3 ஆயிரம் வரை சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஏராளமானோர் புதிய அனுபவத்தைப் பெற்றுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் சுற்றுலாத் துறை அதிகாரிகள். அதாவது தங்கள் வீட்டில் இருந்து கொண்டே செய்யும் பல வேலைகளை இங்கு ரம்மியமான சூழ்நிலையில் அனுபவிப்பது என்பது சொல்ல முடியாத பேரானந்தத்தை அளித்ததாக இங்கு வந்துச் சென்றவர்கள் கூறியுள்ளனர். இங்கு வரும் குடும்பத்தின் தலைவர் தங்களது அலுவலக வேலையைப் பார்த்துக் கொள்ள, அவர்களது குழந்தைகள் வழக்கம் போல ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கிறார்கள். மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு சுற்றுலா வந்த பலரும், அதனை இரண்டு வாரத்துக்கும் மேல் நீட்டிப்பதாகவும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலிருந்தே வேலை செய்தே ஆக வேண்டும், வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் படிக்க வேண்டும், ஆனால், இனியும் வீட்டிலேயே இருக்க முடியாது என்று புலம்புவோருக்கு எல்லாம் இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு மாதங்கள் வரை ஏராளமானோர் இதுபோன்ற பணியிட சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்திருக்கிறார்களாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


