வயதான ஊழியர்கள் பணியிடத்தில் விலக்கப்படுவதாக உணர்வது உண்மைதான் என்று கூறுகிறது ஓர் ஆய்வு.
50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் அறிவாற்றல் திறன் குறைந்து வருவதாக நினைத்துக்கொள்வதே பணியிடத்தில் விலக்கப்படும் உணர்வு ஏற்படக் காரணம் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
பணியிடத்தில் வயதானவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாகவும், இளையவர்களை விட சிறந்த சமூக உறவைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். பணி ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் அனுபவம் பெற்றுள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் பணியிடத்தில் ஒரு வழிகாட்டியாக இருக்கின்றனர். அதே நேரத்தில் இளைஞர்களிடையே வயதானவர்களைப் பற்றிய எதிர்மறையான ஸ்டீரியோடைப்கள் பரவலாக காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, இளைஞர்களை விட வயதானவர்களுக்கு சுறுசுறுப்பு குறைவாக உள்ளது என்று இளைஞர்கள் எண்ணிக்கொள்கின்றனர். இத்தகைய எதிர்மறையான நிலைப்பாடுகளை உள்வாங்கும் வயதான பணியாளர்கள், பணியிடத்தில் தங்கள் நிறுவனத்துக்கும், சக ஊழியர்களுக்கும் குறைவான மதிப்புடையவர்களாக இருப்பதாக உணர்கின்றனர். ஒருகட்டத்தில் சிலர் பணியிடத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும், சிலர் சூழ்நிலை காரணமாக ஒருவித மன அழுத்தத்தில் பணியினைத் தொடர்வதாகவும், அதிலும் குறைவான ஊதியத்தில் சிறிய பொறுப்பில் இருப்பவர்களே இதனை அதிகம் எதிர்கொள்வதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்டுள்ளது.
0 முதல் 76 வயது வரையிலான மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள 1,306 ஊழியர்களிடம் பாஸல் பல்கலைக்கழக உளவியலாளர்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும் வயதானவர்களின் அனுபவத் திறன் நிறுவனத்துக்கு சிறந்த மூலதனமாக இருக்கிறது என்று ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் டாக்டர் ஜனா நிகிடின் தெரிவிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: தவெக தொண்டா் கைது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


