பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் (தெற்கு) இரண்டாம் வகுப்பு மாணவி ஆர்.பி. ஆதிகை முத்தரசியின் தந்தையான வழக்கறிஞர் A E பாஸ்கரன் என்பவர் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்து பயிற்றுவிக்க விருப்பம் கொண்டு பொன்னேரி அரசுப் பள்ளியில் சேர்த்தார். ஆனால், தற்போது அங்கு நிலவும் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற பள்ளிச்சூழல் அவருக்கு ஏமாற்றமளிக்கவே அப்பள்ளியின் 2 ஆம் வகுப்பு மாணவியும் தன் மகளுமான ஆதிகை முத்தரசியை மனுதாரராகச் சேர்த்து பள்ளிக் கல்வி அதிகாரிகளின் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்.