பலருக்கு ஸ்னாக்ஸ் ரவுண்டு முடிவதற்குள்ளாகவே வயிறு நிறைந்து விடும். மெயின் கோர்ஸ் உணவுகளைச் சாப்பிட வயிற்றில் இடமிருக்காது. மெயின் கோர்ஸ் என்பது நமது சப்பாத்தி, தோசை, பூரி, பிரியாணி, அரிசி சாதம், சாம்பார், முட்டைக் குருமா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, பனீர் கிரேவி, மஷ்ரூம் இத்யாதி வகைகள் எனத் தொடரும். அதை முடித்ததும் பின்னர் அனுமார் வால் போல நீளும் டெசர்ட் வகையறாக்களுக்கு வரும் போது வயிறு மெல்ல சிக்னல் கொடுக்கும். ‘போதும்,வேண்டாம் நிறுத்தி விடு, இதற்கு மேல் தாங்காது’ என்று. ஆனால், பலரும் வயிற்றின் பொருமலைக் கண்டு கொள்ளாமல் கேக், ஐஸ்கிரீம், குளோப் ஜாமூன் என அதையும் விட்டு விட மனமில்லாமல் நொறுக்குவார்கள்.