யூ டியூபை நிறுவியர்கள் மூவர். சாட் ஹர்லி, ஸ்டேவ் சென், ஜாவத் கரீம் எனும் மூன்று நண்பர்களும் பே பால் நிறுவனத்தில் முன்னாள் ஊழியர்கள். இவர்களில் கரீமைத் தவிர மற்ற இருவரும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள். சென்ற விவரத்தைக் கரீமிடம் பிறகு வந்து தெரிவிக்கிறார்கள். ஆனால், அதை கரீம் நம்பவில்லை. கரீமை நம்ப வைப்பதற்காக அந்த விருந்து நிகழ்வில் தாங்கள் இருந்த போது எடுத்த விடியோ பதிவை கரீமுக்கு அனுப்ப அவர்கள் முயல்கிறார்கள். அப்போது இ மெயில்களில் விடியோ இணைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட அந்த விடியோ பதிவை அவர்களால் கரீமுக்கு அனுப்ப முடியாமலாகிறது. இது தான் யூ டியூப் உருவானதற்கான ஆரம்பப் பொறி.