அலுவா மாவட்டம் மேற்கு கொடுங்கல்லூரைச் சேர்ந்த ஸ்ரீலக்ஷ்மி தேசிய அளவில் 29 வது மாணவியாகவும், படியட்காவைச் சேர்ந்த ரெஞ்சினா மேரி வர்கீஸ் 49 வது டாப்பராகவும் ஸ்ரீதன்யா 410 வது டாப்பராகவும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் ஸ்ரீதன்யா , பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற முதல்மாணவி என்பதால் அவர் மீது கூடுதல் கவனம் குவிகிறது. ஸ்ரீதன்யா கேரளாவைச் சேர்ந்த குரிச்சியா எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடன் சேர்ந்து இந்திய குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சியுற்ற 25 மாணவர்களில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.