அவரது தெலுங்கு நாவல்களைப் பட்டியலிட்டால் அவற்றில் 16 க்கும் மேற்பட்டவை திரைப்படங்களாக உருமாறியிருக்கின்றன. அவற்றுள் பிரபலமானவைகளைப் பட்டியலிட்டால், மீனா, ஜீவன தரங்குலு, செக்ரெட்டரி, ராதா கிருஷ்ணா, அக்னிப் பூ, சாந்தி ப்ரியா, பிரேம லேகலு, பங்காரு கலலு, ஜெய் ஜவான், ஆத்ம கெளரவம், கிரிஜா கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்கள் என்றென்றும் சினிமா ரசிகர்களால் மறக்க இயலாதவை. இந்த நாவல்கள் அனைத்தும் திரைப்படங்களாக வெற்றி பெற்றதற்கு காரணம் சுலோசன ராணியின் நாவல் நாயகர்களைத் திரையில் பிரதிபலித்தவர்களாக இருந்தவர்கள் அந்நாளைய தெலுங்கு ரொமாண்டிக் ஐகான்களாகக் கருதப்பட்ட நாகேஸ்வரராவும், சோபன்பாபுவும், முரளிமனோகரும் தான்.