பச்சை சட்டை அந்தச் சிறுவனுக்கு மிஞ்சிப் போனால் மூன்று வயதே இருக்கக் கூடும். அவனிடம் விளையாட்டாக ஒரு நபர் ... இன்னைல இருந்து உன்னை இளைஞர் சங்கத்துல சேர்த்தாச்சு... போய் உங்க அப்பாகிட்ட 2000 ரூபாய் வாங்கிட்டு வா, சங்கத்துல உறுப்பினர் ஆகிடலாம் என்கிறார். சரி சாப்பிட்டு விட்டு வாங்கி வருகிறேன் என்று நகர்கிறான் சிறுவன். அந்த நபரோ விடாமல் சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா? என்று மிரட்டும் தொனியில் கேட்க... சிறுவனும் விடாமல், சப்பாடு முக்கியம் என நகர்கிறான். அப்போது இளைஞர்... சங்கத்துல உறுப்பினர் நீ, சாப்பாடு முக்கியமா? என்று மேலும் சிறுவனை கண்டிக்கும் தொனியில் விளையாட்டாய் குரலுயர்த்திப் பேச முயல... பதிலுக்கு சிறுவன் அழத்தொடங்கி... அப்போ எனக்குப் பசிக்குமில்ல, சாப்பிடக் கூடாதா? எனும் காட்சி இன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.