/

உலகின் மிக அழகான சிறுமி இவள்தான்!

நைஜீரியாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிதான் இப்போதைய அழகான சிறுமி. அந்த சிறுமியின் பெயர் ஜேர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:28 pm

சுதந்திரன்

நைஜீரியாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிதான் இப்போதைய அழகான சிறுமி. அந்த சிறுமியின் பெயர் ஜேர். பார்க்க பார்பி பொம்மை மாதிரி இருக்கும் இந்த சிறுமியின் கண்களும் சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியும் அழகைக் கூட்டுகிறதாம். இது சிறுமியின் படங்களை பார்த்தவர்களின் கணிப்பு.

Story image

இந்த சிறுமியின் படங்களை படம் எடுத்த மோஃப். கூறுகையில்: 'ஆம்... இந்தப் பெண் மனுஷிதான்... தேவதையும் ஆவாள்'. காமிராவை கிளிக் செய்யும் போது சிறுமியை சிரிக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது செயற்கையாக அமைந்திருக்கும். சிறுமியின் கண்கள் பேசட்டும் என்று சிறுமியின் போக்கில் விட்டு படம் பிடித்தேன்' என்கிறார். இன்ஸ்ட்டாகிராமில் வெளியான இந்தப் படங்கள் வைரலாகி உலகின் மிக அழகான சிறுமி என்ற பாராட்டையும் பெற்றிருக்கிறாள். வலை தளங்களை வளைத்துப் போட்டிருக்கும் அழகான சிறுமி என்றும் போற்றப்படுகிறாள். 'உலகின் மிக அழகான சிறுமி' என்று தன்னைக் கொண்டாடுவதை ஜேர் அறிந்திருப்பாளா என்பதும் சந்தேகமே.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.