திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

‘உங்கள் இதயம் இருக்கும் இடம் ஏஷியன் பெயிண்ட்ஸ்’ சீஸன் 2 அனிருத் ரவிசந்தர் உங்களை வரவேற்கிறார்!

இந்த எபிஸோடில் மனம் திறந்து பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் அனிருத்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:44 pm

உமாகல்யாணி

அனிருத் தன் அழகான வீட்டின் ஒவ்வொரு அறைக்குள் சென்று அதில் புதைந்துள்ள தன்னுடைய வாழ்க்கையின் மலரும் நினைவுகளை, குழந்தைப் பருவத்து புகைப்படங்களை, தன் குடும்ப உறவுகளைப் பற்றிய விபரங்களை மற்றும் தனது இசைப் பயணம் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார். இந்தப் பயணத்தில் அவருடன் பங்கு பெற உங்களை வரவேற்கிறார்.

Story image

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதை உண்டு. அந்தக் கதையை வார்த்தைகளில் அடக்கி விட முடியாது. வீடு என்பது வசிப்பிடம் மட்டுமல்ல. அது  வெளிச்சம், சப்தம், நிறம், காற்றின் கீதம், அமைதியின் நிழல், மதிய வெயிலின் வெளிச்சக் கோடு, இரவின் ஆழ்ந்த நிசப்தம் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சில சமயம் வீட்டை மனிதர்கள் தேர்ந்தெடுப்பார்கள். சில சமயம் வீடு தனது மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான்.

அழகியலை வீட்டினுள் உருவாக்கி வரும் இந்தியாவின் தலைசிறந்த பெயிண்ட் நிறுவனமான ஏசிஷன் பெயிண்ட்ஸ் கூறுவதும் அத்தகைய ஒரு உண்மையைத்தான். தற்போது ஏஷியன் பெயிண்ட்ஸ், ‘உங்கள் இதயம் இருக்கும் இடம் ஏஷியன் பெயிண்ட்ஸ்’ என்ற வெப்தொடரின் இரண்டாவது சீஸனை தயாரித்துள்ளது. இத்தொடரின் மூலம் பிரபலங்களின் இல்லங்கள் உள்ளவாறு எப்படி இருக்கின்றன, அவர்களுடைய வாழ்வியல் என்ன, அவர்களது வீட்டிலுள்ள பொருட்கள் என்ன நிறத்தில் உள்ளன, சோபா மற்றும் ஃபர்னிச்சர்கள் எத்தகையன, அந்த வீடுகளின் சுவர்கள் எந்தளவுக்கு கலை நயத்துடன் அழகிய வண்ணங்களின் உருவாக்கப்பட்டுள்ளது என்பன போன்ற பலவற்றை இத்தொடர் காட்சிப்படுத்துகிறது.

Story image

உங்களுக்குப் பிடித்த திரை நட்சத்திரங்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று உரையாடி, அவர்களைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முயற்சிக்கும் நிகழ்ச்சி இது. தற்போது இதன் ஐந்தாவது எபிஸோடில் இசையமைப்பாளர் அனிருத்தின் வீட்டுக்குச் செல்கிறோம். அனிருத்தை தெரியாதவர்கள் அதிகம் பேர் இருக்க முடியாது; சின்ன வயதிலேயே பெரிய சாதனைகளை செய்து வருபவர். வொய் திஸ் கொலவெறி பாடல் மூலம் தமிழ் திரை இசை ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்துவிட்டவர் அனிருத். இளம் தலைமுறை தென்னிந்திய இசையமைப்பாளர்களுள் முக்கியமானவர். தற்காலத்தின் நவீனமும் சென்னையின் பாரம்பரிய கலை நயமும் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு அழகான அடுக்ககத்தில் வசிக்கிறார் அனிருத்.

Story image

இந்த எபிஸோடில் மனம் திறந்து பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் அனிருத். சின்ன சின்ன விஷயங்களில் கூட அவர் செலுத்தும் கவனத்தைப் பார்த்தால், குடும்ப உறவுகளுக்கு அவர் தரும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். அவரது வீட்டில், லிவிங் ரூம், பெட் ரூம், மேஜைகளில் ப்ரேம் செய்யப்பட்ட பல புகைப்படங்களை பார்க்கலாம். அதில் சின்ன வயது அனிருத், அம்மாவுடன், அப்பா அம்மாவுடன் குழந்தை பருவத்தை செதுக்கி வைத்தது முதல் அவரது பல நினைவுகளை பதிய வைத்த ஃபோட்டோக்கள் சூழ்ந்துள்ளன. இப்படி குழந்தை பருவம் முதல் தற்போதுவரை பெற்றோர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆங்காங்கே வீடு முழுவதும் அடுக்கி வைத்திருக்கிறார். மேலும் தலைவர் என்று அவர் அழைக்கும் அவரது மாமா ரஜினிகாந்த் மற்றும் ஏ ஆர் ரஹ்மானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவர்கள் மீதான மதிப்பை தெரியப்படுத்துகிறது.

Story image

தனது வீட்டில் பிடித்த இடமாக அனிருத் குறிப்பிடுவது ஊஞ்சல் வைக்கப்பட்டிருக்கும் ஓரிடம். அதனைத் தொடர்ந்து காணப்படும் டைனிங் மற்றும் லிவிங் ரூமை 'ஹாட் சீட்' என்று அழைக்கிறார். காரணம் அங்குதான் குடும்பத்தினர் ஒன்றுகூடி பேசுவதற்கும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் ஏற்ற இடம் என்கிறார். மேலும் நண்பர்கள் வந்தால் அவர்களுடன் அரட்டை அடிக்கவும் ஏற்ற இடம் இதுவே என்றும் கூறுகிறார்.

சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா? அனிருத்தைப் பற்றியும் அவரது வீட்டைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள இந்த சுட்டியை திறக்கவும் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.