அந்தப் பிரச்சாரக் கையேடு எய்ட்ஸ் நோய்க்காரணிகளாக குறிப்பிட்டிருப்பது உலகின் தொன்று தொட்ட மூடநம்பிக்கைகளையே; இதுநாள் வரை அந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து தான் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரகர்கள் உலகம் முழுக்கப் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், மேடை நாடகங்கள், குறும்படங்கள், பாடல்கள் எனப் பல்வேறுவிதமாகத் தமது எதிர்ப்புணர்வைக் காட்டி வருகிறார்கள். அவற்றின் மூலமாக மக்கள் சிறிது, சிறிதாக மனமாற்றம் அடைந்து எய்ட்ஸ் நோய் என்பது இன்னின்ன விதங்களில் எல்லாம் பரவாது. அது நோய்ப்பாதிப்பு கொண்டவரோடு உடல் ரீதியான உறவு கொள்ளும் போதும், ரத்த தானம் பெறும் போதும் மட்டுமே பரவும் என ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ஒரு மாநில அரசின் பிரச்சார அமைப்பு கொஞ்சம் கூட பொறுப்புணர்வே இல்லாமல் மக்களின் பழைய மூடநம்பிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் மீண்டும் அவற்றை உண்மை என அச்சிட்டு பிரச்சாரக் கையேடுகளை வழங்கி இருப்பதை என்னவென்று சொல்ல;