டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தெலுங்கு ‘பிக் பாஸ்’ க்காக ஜூனியர் என் டி ஆர் வாங்கப் போகும் அதிர வைக்கும் சம்பளம்!

இந்த நிகழ்ச்சிக்கு ஜூனியருக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ந்து விடாதீர்கள்... 10 எபிசோடுகளுக்கு 8 கோடி ரூபாய்களாம்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

சரோஜினி

இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய, தமிழில் கமல் தொகுத்து வழங்கப் போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கப் போவதாக டோலிவுட்டில் ஒரு பேச்சிருக்கிறது. ஸ்டார் மா டி.வி யின் இந்த நிகழ்ச்சிக்காக ஜூனியரின் பெயரை அவர்களுக்கு டிக் அடித்துக் கொடுத்த சீனியர்கள் சிரஞ்சீவியும், நாகார்ஜுனாவும் தானாம். அதனால் ஜூனியர் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வதில் எந்த வித சிக்கலும் இருக்கப் போவதில்லை. தற்போது தனது சகோதரரான நந்தமூரி கல்யாண்ராமின் தயாரிப்பில் ஜெய் லவ குசா படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் ஜூனியர் என் டி ஆர் அந்த வேலைகள் முடிந்ததும் ஸ்டார் மா டி.வி காரர்களின் வாய்ப்பை ஒப்புக் கொள்ளப் போவதாக டி.வி தரப்பில் கூறப்படுகிறது. 

பிரபலங்களை ஒரே இடத்தில் தங்க வைத்து அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஜூனியருக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ந்து விடாதீர்கள்... 10 எபிசோடுகளுக்கு 8 கோடி ரூபாய்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.