சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த செவ்வாய்கிழமை அறிமுகமாகி கடைகளில் அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இது ஜியோமியின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ரெட்மி 4 மாடலுடன் எம் ஐ ரெளட்டர் 3சி தரப்படுவது கூடுதல் சிறப்பு.
ரெட்மி 4 மூன்று வித்தியாசமான மாடல்களில் வெளியாகிறது. 2GB RAM+16GB, இரண்டாவது 3GB RAM+32GB 9999 ரூபாய்க்கும், 3மற்றது 4GB RAM+64GB. இதன் விலைகள் முறையே ரூ 6,999, ரூ 8,999 மற்றும் ரூ 10,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரவுள்ளது. மே 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு எம்.ஐ மற்றும் ப்ளிப்கார்ட் இணையதளங்களில் ஃப்ளாஷ் சேல் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று உறுதி செய்கிறார்கள் மி.காம் மற்றும் அமேசான்.இன் நிறுவனங்கள்.
ரெட்மி நான்கை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்கிறோம். இது ரெட்மி 3S-ன் அடுத்த பதிப்பாகும். நிச்சயம் இந்த ரெட்மி 4 திருப்திபடுத்தும் என்று நம்புகிறோம். தரம் மற்றும் விலை அனைவராலும் வாங்கக் கூடிய வகையில் உள்ளது என்றார் ஜியோமி நிறுவனம் இந்திய கிளையின் தலைமை நிறுவனர் மனு ஜெயின்.
5 inch ஹெச் டி டிஸ்ப்ளே, குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டா கோர் ப்ராஸசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போன். இதற்கு முன்னர் வெளிவந்த வெர்ஷனில் ஸ்னாப்ட்ராகன் 650 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் ரெட்மி நோட் 3-ஐ காட்டிலும் இதன் பேட்டரி திறன் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 4100mAh பேட்டரி திறன் கொண்ட சற்று பெரிய பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தில், ஆன்ட்ராய்டு N இயங்குதளம் கொண்டு இந்த போன் இயக்கப்படுகிறது. இதன் கேமரா 13 மெகாபிக்சல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எம் ஐ ரெளடர் (Mi Router) பொருத்தவரை மே 20 முதல் எம் ஐ இணையதளத்திலும் மே 23 முதல் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஜூன் 8 முதல் கிடைக்கும். இதன் விலை ரூ.1,199/-
அதிரடியாக சிறந்த தொழில்நுட்பத்துடனும் குறைந்த விலையிலும் களம் இறங்கியுள்ள ஜியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கான இடத்தை பிடித்து தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


