‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்பது 4 பெண்களின் கதை. சமுதாயத்தில் பெண்களுக்கான பாலியல் சமநிலையின் அவசியம் குறித்து விவாதிப்பதில் தயக்கம் காட்டும் இந்தியா போன்ற பிற்போக்கு சமூகத்தில் விடாது போராடி தங்களுக்கான சம உரிமையை நிலைநாட்டும் 4 பெண்களின் வாழ்க்கையே ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரைப்படம். அந்த 4 பெண்களாக திரையில் வாழ்ந்திருப்பவர்கள்... கொங்கனா சென் ஷர்மா, ரத்னா பதக்ஷா, அஹானா கும்ரா, மற்றும் லபிதா போர்தகுர் இவர்கள் நால்வரும் தான். இவர்களுடன் சுஷாந்த் சிங் மற்றும் விக்ராந்த் மஸ்ஸே இருவரும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.