தமிழில் ‘குற்றப் பரம்பரை’ திரைப்படத்தை எடுக்க பாலாவும், பாரதிராஜாவும் சண்டை போட்டுக் கொண்டது பழங்கதை. இப்போது வரை அந்தப் படத்தை யார் எடுக்கப் போகிறார்கள்? எனத் தெரியாத நிலை தான். இடையில் தனது குற்றப் பரம்பரை கதையை திரைப்படமாக்கும் தகுதி பாலா ஒருவருக்கே உள்ளது என அக்கதையின் ஆசிரியரான வேல.ராம மூர்த்தி தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். எழுத்தாளர் ரத்னகுமார் என்பவர் ‘குற்றப் பரம்பரை’ என்பது தனது கதைக்காக தான் பதிவு செய்து வைத்த டைட்டில் எனக் கூறி கதைக்கு உரிமை கொண்டாடினார். குற்றப்பரம்பரைக்காக நடந்த சண்டைகள் அனைத்தும் என்ன ஆயினவோ? ஆனால் இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய வகுப்பினர் குற்றப் பரம்பரை என முத்திரை குத்தப் பட்டு கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் குற்றம் சாட்டப்பட்டு மிகுந்த கொடுமைகளை அனுபவித்து வந்தனர் என்பது அப்பட்டமான உண்மை. இது நிஜ வரலாறு.

இப்போது விசயம் அதுவல்ல, தமிழகம் மட்டுமல்ல வட இந்தியாவிலும் கூட இப்படியான ஒரு குற்றச்சாட்டு முறையை பிரிட்டிஷார் கையாண்டிருக்கின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்த குற்றப் பரம்பரை வரலாற்றை ஆவணப் படுத்தி எழுதப்பட்டது தான் ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்’ கதை. பிரிட்டிஷ் ஆட்சியில் வட இந்தியாவில் கொள்ளைக்காரர்களாக, கொலைக்காரர்களாக சித்தரிக்கப் பட்டவர்களைப் பற்றியதான இந்தக் கதையில் அமீர்கான் கொள்ளைக்கார நாயகனாக நடிக்கவிருக்கிறாராம். கொள்ளைக் கூட்டத் தலைவனாக நடிக்கவிருப்பது ‘பிக் பி’ அமிதாப் பச்சன். வரலாற்றை ஆவணப் படுத்தும் வகையிலான லகான், டங்கல், அமீர்கானின் முந்தைய படங்கள் எப்போதுமே அதிரடி வெற்றிகளை அள்ளிக்குவித்தவை. என்பதோடு அமீர்கானின் ‘டங்கல்’ தமிநாட்டில் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் ஓயவில்லை. மக்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று அந்தப் படத்தை பார்த்தார்கள். இந்திய அளவில் படத்திற்கு பெயரளவுக்கு மட்டுமல்ல வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி கிடைத்தது. அப்படிப் பட்ட அருமையான திரைக்கதை அமைப்புடன் அமீர்கான் குற்றப் பரம்பரை கதையில் நடித்து அது தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உலகளாவிய பாராட்டுகளைக் குவிக்கும் முன்பாகவாவது, நமது தமிழ் இயக்குனர்கள் தங்களது பகையை மறந்து குற்றப் பரம்பரை குறித்த நமது தமிழக வரலாற்றை திரைப்படமாக பதிவு செய்து முடிப்பார்களா? எனத் தெரியவில்லை.
அமீர்கானும், அமிதாப் பச்சனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்’ இந்தித் திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப் படும் வகையில் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


