நாடு முழுதும் பெரும்பாலான இடங்களில் முறையான பார்கிங் வசதிகள் மேற்கொள்ளப் படவில்லை. அதனால் வீடுகளிலும், அபார்ட்மெண்ட்டுகளிலும், அலுவலகங்களிலும், தங்களது வாகனங்களை நிறுத்தும் வசதிகளற்றவர்கள் சாலையோரங்கள், பூங்காக்கள், மற்றுமுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் எல்லாம் தங்களது வாகனங்களைப் பார்க் செய்து விடுகிறார்கள், இதனால் நடைபாதைகள் வெகுவாக ஆக்கிரமிக்கப்பட்டு விபத்துக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மக்களிடையே முறையான பார்க்கிங் வசதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அரசு இம்மாதிரியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டியதாகி விடுகிறது. மேலும் இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு2 மில்லியன் கார்கள் நாடு முழுதும் விற்பனையாகின்றன. எனவே கார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்க்கிங் வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப் படவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.