சிரிக்கும் போது பற்கள் வெண்மையாக பளீரிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது! ஆனால் பெரும்பாலனவர்களுக்கு பற்கள் வெண்மையாக இருப்பதில்லை. இயற்கையில் பல் மருத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் மனிதப் பற்களின் நிறம் எப்போதுமே, யாருக்குமே பளீரிடும் வெண்மை நிறத்தில் இருப்பதில்லை என்பதே நிஜம். அவரவர் சார்ந்துள்ள நிலப்பகுதி, சீதோஷ்ண நிலை, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் கரைந்துள்ள மினரல்கள் அடிப்படையில் மனிதர்களுக்கு பற்களின் நிறங்கள் அமைகின்றன. இயற்கை பற்களின் நிறம் போதாது, என்று நினைப்பவர்கள் உடனடியாக பளீரிடும் பற்களைப் பெற வேண்டுமானால் என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். இது மிக மிக எளிமையான முறை தான்.
தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு: 1/2 டீஸ் பூன்
பேக்கிங் சோடா: 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு வேண்டாமென்பவர்கள் அதற்கு பதிலாக அதே அளவு தண்ணீரும் பயன்படுத்தலாம்.

செய்முறை:
1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு சின்ன கப்பில் எடுத்துக் கொண்டு, அதனுடன் அதே அளவு 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு கலந்ததும் அது இரண்டும் வினைபுரிந்து குமிழிகளாக வரும். குமிழ்கள் அடங்கி கலவை நன்கு கெட்டியானதும். அவற்றை மோதிர விரலால் ஒற்றி எடுத்து பற்களில் அப்ளை செய்ய வேண்டும். மூன்றே நிமிடங்கள் மட்டும் தான். அதற்கு மேல் வேண்டாம். பிறகு நன்றாக வாய் கொப்பளித்து கழுவ வேண்டும். இந்த முறை உடனடிப் பலன் தரும்.
ஆனால் சிலருக்கு எலுமிச்சை சாறு வேண்டாம் என்று நினைத்தால் அதற்கு பதிலாக அதே அளவு தண்ணீர் கலந்து, கலவை நன்கு கெட்டியானதும் பேஸ்ட் போல பாவித்து பிரஸ்ஸில் தடவி பற்களை நன்கு தேய்த்துக் கழுவினால் போதும். இந்த முறையில் பற்கள் வெண்மையாக 1 முதல் 2 வாரங்கள் ஆகும். எப்படியானாலும் இரண்டு முறைகளுமே பயனளிக்கக் கூடியவையே!

பேக்கிங் சோடாவின் நன்மை: இது பற்குழிகளை உண்டாக்க வல்ல ‘ஸ்ட்ரெப்டோ காக்கஸ் மியூட்டன்’ எனும் பாக்டீரியாக்களை அழித்து விடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


