அந்தக் காட்சியை அப்படியே எடுத்து மீட்டுருவாக்கம் செய்து தற்போது ‘திறந்த வெளியில் மலம் கழித்தால் இப்படித்தான் அடிபட்டு, காயமடைவீர்கள்’ எனும் ரீதியில் ராஜஸ்தானின் பிரதாப்கார்க் மாவட்டக் கிராமங்களில் ஸ்வச் பாரத் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இன்றளவும் வட மாநிலங்கள் பலவற்றிலும் முற்றிலும் தவிர்க்க முடியாத அம்சங்களுள் ஒன்றாகவே இருந்து வருவதால், அப்பழக்கத்தை மக்கள் மனங்களில் இருந்து முறியடிக்கும் விதமாக இப்படி வெற்றி பெற்ற திரைப்படங்களில் இருந்து காட்சிகளை உருவி அவற்றின் மூலமாக ஸ்வச் பாரத் விளம்பரங்கள் வலுவூட்டப்படுகின்றன. ராஜஸ்தானில் இம்முயற்சியைத் துவக்கி வைத்தவர் முனிஸிபாலிட்டி எக்ஸிகியூட்டிவ் அதிகாரியான ஹிமான்சுல் அகர்வால்.