எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

‘மகாநதி’ யில் அனுஷ்காவும் நடிக்கப் போகிறாராம்... அப்போ கீர்த்தி சுரேஷ்?

அனுஷ்கா ‘மகாநதி’ க்குள் வரும்பட்சத்தில் அவர் ஏற்று நடிக்கவிருப்பது எந்த நடிகையுடைய கதாபாத்திரம்? எனும் ஆர்வம் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் வரும்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:20 pm

சரோஜினி

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கு மற்றும் தமிழில் திரைப்படமாகவிருப்பது தெரிந்த செய்தி. அதில் கீர்த்தி சுரேஷ் ‘சாவித்திரி’ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், சமந்தாவும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்கவிருப்பதும் நாம் முன்னரே அறிந்த செய்திகள் தான். மகாநதியைப் பொறுத்தவரை இன்றைய புதுச் செய்தி என்னவென்றால்? அத்திரைப்படத்தில் அனுஷ்காவும், பிரகாஷ் ராஜும் கூட நடிக்கவிருக்கிறார்கள் என்பது தான்.

அனுஷ்கா ‘மகாநதி’ க்குள் வரும்பட்சத்தில் அவர் ஏற்று நடிக்கவிருப்பது எந்த நடிகையுடைய கதாபாத்திரம்? எனும் ஆர்வம் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் வரும். அனுஷ்காவும், பிரகாஷ் ராஜும் இதுவரை மகாநதிக்கென தேர்வாகி இருக்கும் மற்ற எல்லா நடிகர்களை விடவும் அதிக திறமையும், அனுபவமும் கொண்ட நடிகர்கள் என்பது திரை உலகினர் மட்டுமல்ல ரசிகர்களும் அறிந்த விசயமே! அப்படி இருக்கும் பட்சத்தில் கதா பாத்திரங்கள் மாற வாய்ப்பிருக்கிறதோ! அல்லது இன்னும் எத்தனை அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் எல்லாம் மகாநதி சாவித்திரிக்காக இத்திரைப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள் எனும் எதிர்பார்ப்பில் இந்த திரைப்படத்துக்கான வரவேற்பு இப்போதே எகிறிக் கொண்டிருக்கிறதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.