காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வெஜிடபிள் சாலடுகளில் வேக வைத்த முட்டையைக் கலந்து சாப்பிடுவதால் நமது உடலில் விட்டமின் ‘E' உட்கொள்ளும் சதவிகிதம் அதிகரிப்பதாக சமீபத்திய உணவு ஆராய்ச்சிக் கட்டுரை ஓன்று விவரிக்கிறது. அதாவது இதுவரை நாம் அறிந்திருந்தது என்னவெனில் எண்ணெய் வித்துக்கள் மற்றும் முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ்களில் மட்டும் தான் விட்டமின் ‘E' அதிகமிருக்கும் என்று, ஆனால் மேற்கண்ட ஆய்வறிக்கை சொல்வது என்னவெனில் வெள்ளரிக்காய், பிரக்கோலி, பெங்கலூரு தக்காளி, ஃப்ரெஷ் கீரை வகைகள் போன்ற காய்கறிகளுடன் பாதாம், ஹஸல்நட் உள்ளிட்ட குறைவான கொழுப்புச்சத்து கொண்ட நட்ஸ் வகைகளும் சேர்த்து தயாரிக்கப்படும் சாலட்டுடன் வேக வைத்த முட்டை கலந்து சாப்பிட்டால், காய்கறிகள் மற்றும் நட்ஸ்களில் இருந்து உடல் தனக்குத் தேவையான விட்டமின் ‘E' சத்தை வழக்கத்தை விட அதிகமாகவே உறிஞ்சிக் கொள்ளும் என்று அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்திலிருக்கும் பர்டியூ மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சத்துணவுத் துறைப் பேராசிரியர் வெய்ன் கேம்ப்பெல் தனது சமீபத்திய உணவு ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.