மாணவ, மாணவிகளின் உயிர் விஷயத்தில் இத்தனை அலட்சியம் ஏன்? முன்னதாக 2012 ல் இதே போன்ற ஒரு விபத்து சென்னை சேலையூரில் நடந்த போது அப்போது உயிரிழந்த 7 வயது சிறுமி ஸ்ருதிக்காக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் பள்ளிப் பேருந்துகளில் ஓட்டுநர் தவிர்த்து அனைத்து பள்ளிப் பேருந்துகளிலும் மாணவ, மாணவர்களின் பாதுகாப்பு கருதி அட்டெண்டர் ஒருவரும் பேருந்தினுள் உடனிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. இதையொட்டி மாநில அரசு ’தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின்’ கீழ் பள்ளிப்பேருந்துகள் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சில திருத்தங்களைச் செய்து தனியார் பள்ளிகளுக்காக ஓர் அறிக்கை வெளியிட்டது.