டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

லெனோவா Z2 ப்ளஸ் : அறிமுகம்

லெனோவாவின் புதிய வரவான Z2 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:27 pm

உமா ஷக்தி.

லெனோவாவின் புதிய வரவான Z2 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் குறைவான விலை மட்டுமல்ல, பல வகையான சிறப்பு தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர இந்த மொபைல் இரண்டு வகையான ரேம்களில் (RAM) கிடைக்கிறது, முதல் வகை ரூ.19,999/- விலையில் 4GB ரேம் (64GB மெமரி வரை நீட்டிக்கலாம்) இரண்டாம் வகை ரூ.17,000 3GB ரேம் (32GB மெமரி வரை நீட்டிக்கலாம்).

சமீப காலமாக ஜியோமி போன்ற ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. இதற்கு சரியான போட்டியாக சீனத் தயாரிப்பான இந்த Z2 ப்ளஸ் ஃபோன் இந்திய சந்தையை குறி வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. இதே ஃபோன் சீனாவில் ZUK Z2 என்ற இதன் அசல் ப்ராண்டிங் பெயரில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் அந்தப் பெயர் அதிகம் பரிச்சயம் இல்லாத காரணத்தால், அவர்களின் இந்திய ப்ராண்டிங் பெயரான லெனோவாவையை பயன்படுத்தி உள்ளார்கள். பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்காமல் பெயரை சரியாகப் பயன்படுத்தி சாதனை செய்து வருகிறது ஜுக் (ZUK).           

Z2 ப்ளஸ் இதுவரையில் உள்ள மற்ற ஸ்மார்ட்ஃபோன்களை விட மிகவும் வித்தியாசமானது. இந்த ஃபோனில் மெட்டல் ஃபினிஷிங் கிடையாது. ஃபைபர் க்ளாஸ் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் பேட்டரி திறன் அபாரம். எடையும் குறைவு, அழகான டிசைன். கண்களைக் கவரும் கருப்பு, பளீர் வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

இந்த ஃபோனில் ஆபரேட்டிங்க் இயங்குதளம் ஆன்ட்ராய்டு 6.0.1, பிராஸஸர் 2.15GHz. மேலும் இதில் என்னென்ன நுட்பங்கள் உள்ளன என்று விரிவாகப் பார்க்கலாம்.

5 இன்ச் 1080பி டிஸ்பிளே 

டிஸ்ப்ளே : 5 இன்ச் (1920 x 1080பிக்சல்கள்) புள் எச்டி எல்பிடிஎஸ் கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே ப்ராசஸர் : அட்ரெனோ 530 ஜிபியூ உடனான 2.15ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820

ரேம் (RAM)

32GB உள்ளடக்க மெமரி கொண்ட 3GB  டிடிஆர்4 ரேம் மற்றும் 64GB உள்ளடக்க மெமரி கொண்ட 4GB ரேம். இயங்குதளம் - ஆண்ட்ராய்டு 6.0 (மார்ஷ்மெல்லோ)

கேமரா 8MP 13MP

பின்பக்க கேமரா : எல்இடி பிளாஷ், எப்/2.2, 5பி லென்ஸ், ஐஎஸ்செல் சென்சார், பிடிஏஎப், சிஏஎப் டவுல் மோட் போகஸ், ஏஐஎஸ் கொண்ட 13எம்பி கேமரா.

முன்பக்க கேமிரா : 78.9 டிகிரி வைட் வியூவிங் ஆங்கிள் கொண்ட ப்ராண்ட்-பேஸிங் 8 எம்பி கேமரா.

பின் பக்க கேமராவால் 4K தரமுள்ள வீடியோக்களையும், முன்பக்க கேமராவில் முழு HD வீடியோ எடுக்க முடியும். 120fps, 240fbs மற்றும் 960fps ஸ்லோமோஷன் ஷாட்டுகளை எடுக்கலாம்.

சிம்

டபுள் சிம் வசதி மற்றும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உண்டு

பேட்டரி

க்வால்காம் க்விக் சார்ஜ் 3.0 கொண்ட 3500 எம்ஏஎச் திறன் ஆதரவு : 4ஜி வோல்ட், wifi 802.11ஏசி (2.4/5ஜிகாஹெர்ட்ஸ்), ப்ளூடூத்4.1,ஜிபிஎஸ், யூஎஸ்பி 2.0 டைப் -சி

எடை 

149கிராம் பேட்டரி ஒரே கையில் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு இந்த ஃபோன் கையடக்கமாக இருப்பதால், செல்ஃபோன் விரும்பிகள் மிகவும் ரசிப்பார்கள்.  

யூ டச்

இதில் புதிதாக சேர்க்கப்பட்ட U டச் தொழில்நுட்பம் பயன்பட்டாளர்களுக்கு பேருதவியாக இருக்கும். யூ டச் மூலம் ஹோம் பட்டனை நாமே வகைமை படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஹோம் ஸ்க்ரீனுக்குள் செல்ல ஒரு முறை தொட வேண்டும். இரண்டு முறை தொட்டால் ஹிஸ்ட்ரிக்கும் இடது அல்லது வலது பக்கம் ஸ்வைப் செய்தால் மல்டி டாஸ்கிங் பகுதிக்கு செல்லலாம். தவிர இதில் யூ ஹெல்த் என்ற ஒரு ஆப் உள்ளது. அதை தரவிறக்கம் செய்து உடல் எடை குறைப்பு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் கொண்டு வரலாம்.

மேலும் லெனோவா Z2 ப்ளஸ் மாடலில் Wifi, GPS, ப்ளூ டூத், 4ஜி வசதி, இரண்டு சிம் பொருத்திக் கொள்ளும் வசதி என அசத்தலான பல வசதிகள் உள்ளன. 

சில குறைகள்

32GB அல்லது 64GB இரண்டு வகையிலுமே அதற்கு மேல் மெமரியை நீட்டிக்க முடியாது. பின்பக்கம் க்ளாஸி ப்ரேம் உள்ளதால் சில சமயம் படம் எடுக்கும்போது தெளிவாக இருப்பதில்லை. மேலும் சில சமயங்களில் கேமரா வெளிச்சத்தை தானாக உள்வாங்கி கொள்ளாது. மெதுவாக ஃபோகஸ் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் அல்லது தெளிவாகப் பார்க்க 80 சதவிகிதத்துக்கு  மேனுவலாக மாற்றி வைக்க வேண்டும்.

தவிர்க்க கூடிய சில குறைகள் இருந்தாலும் ஒரே வார்த்தையில் முடிவாக சொல்ல வேண்டும் எனில், லெனோவா Z2 ப்ளஸ் போன் கொடுத்த விலைக்கு மிகச் சிறந்த செயல்பாடுகளுடன் விளங்குகிறது என்பது உண்மை. எனவே நம்பி வாங்கலாம்.

-  அனுஜ் ஷர்மா (ஆங்கிலத்தில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.