சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான நுரையீரலை வலியுறுத்தும் NAPCON 2016 எனும் நுரையீரல் தொடர்பான நோய்கள் குறித்த மாநாட்டின் சிறப்புத் தூதராக பாலிவுட் நடிகர் அனில் கபூர் நியமிக்கப் பட்டுள்ளார். அது தொடர்பாக சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ஆர்ரோக்கியம் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய பேங்க் பேலன்ஸ் என்று கூறினார். அதோடு பணத்தைக் கொண்டு நம்மால் தூய்மையான நுரையீரலையோ, தூய்மையான மனதையோ, தூய்மையான இதயத்தையோ எளிதில் விலைக்கு வாங்கி விட முடியாது என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடித்தால் மட்டுமே அவையெல்லாம் கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் ‘தனது குடும்பத்தின் ஆரோக்கியம் என்று வரும் போது உடலாலும் சரி, மனதாலும் சரி தான் ஒரு முறைக்கு இருமுறை தீர ஆலோசித்து விட்டு பிறகே அந்தப் பொருட்களை வாங்கத் துணிவதாகவும், அதே சமயம் தனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று நம்பும் எதை வாங்கவும் தான் மறுமுறை யோசித்ததே இல்லை எனவும் அவர் தெரிவித்தார். எதெல்லாம் ஆரோக்கியமானதோ அவற்றை வாங்க கையெழுத்திட்ட பிளாங் செக் தரக் கூட தான் தயங்கியதே இல்லை என்று கூட அவர் தெரிவித்தார்.
தினமும் காலையில் விழித்தெழும் போது ஒவ்வொருவரும் முதலில் செய்ய வேண்டியது தங்களது சுவாசம் எப்படி இருக்கிறது என்பதைச் சோதிக்கும் வேலையைத் தான். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தீர்கள் எனில் உங்க்லது சுவாசம் மிக மிகக் குறுகியதாகவும், மேலோட்டமானதாகவும் இருக்கும். இது முற்றிலும் தவறான சுவாசமுறை. சுவாசம் ஒரே சீராக இருந்தால் தான் நமது நுரையீரல் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று பொருள். எனவே தினமும் முதல் வேலையாக உங்களது சுவாசம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதை முதல் வேலையாக வைத்துக் கொண்டு அதிலிருந்து உங்கள் ஆரோக்கியத்தை கணக்கிடுங்கள். ஏனெனில் ஆரோக்கியம் தான் மனிதனின் மிகப்பெரிய பேங்க் பேலன்ஸ்’ என்றும் அனில் கபூர் தெரிவித்தார்.
தற்போது அனில் கபூருக்கு வயது 59. இந்த வயதிலும் அவர் அலுப்பின்றி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதற்கு ஆரோக்கியம் குறித்த அவரது தெளிவான பார்வையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


