பிரபலங்களின் மெழுகுச் சிலைகளுக்குப் பெயர் போன மேடம் டுஸாட் மியூசியத்தின் கிளை ஒன்று வெகு விரைவில் நமது தலைநகர் டெல்லியில் திறக்கப் படவுள்ளதாக அதன் தலைமை நிறுவனம் ‘மெர்லின் எண்டர்டெயின்மெண்ட்ட்லிருந்து’ அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லியின் பரபரப்பான இடங்களில் ஒன்றான கன்னாட் பிளேஸில் இருக்கும் ரீகல் சினிமா காம்ப்ளெக்ஸின் இரண்டு தளங்களை முழுவதுமாக எடுத்துக் கொண்டு இந்த மியூசியக் கிளை இயங்கவிருப்பதாக அதன தலமை அதிகாரி ஜான் ஜேகப்ஸன் தெரிவித்தார்.
லண்டன் மேடம் டுஸாட் மியூசியத்தில் இதுவரை இடம் பெற்ற இந்தியப் பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்; இந்த உலகப் புகழ் பெற்ற மெழுகுச் சிலை மியூஸியத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர் பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யாவுக்கும் இதில் இடமுண்டு, நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது மெழுகுச் சிலையும் இங்கு உண்டு. இந்த வரிசையில் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் சென்று ஜெயித்தவர்களின் மெழுகுச் சிலைகளை டெல்லியில் இனி திறக்கபட உள்ள மியூசியக் கிளையில் பார்வைக்கு வைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லண்டனைப் போல அல்லாது இந்தியாவில் அங்கே காட்சிக்கு வைக்கப்படும் மெழுகுச் சிலைகளை வெகு அருகாமையில் கண்டு களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
சினிமா, இசை, விளையாட்டு, உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகள் செய்து இந்தியாவில் மட்டுமல்ல சர்வ தேச அளவில் கவனம் ஈர்த்த இந்தியப் பிரபலங்களின் சிலையை வெகு விரைவில் மேடம் டுஸாட் மியூசியத்தில் காணலாம். காத்திருங்கள் 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


