வாசிப்பால் இணைந்த இளைஞர்கள்!
கலை மற்றும் இலக்கியங்கள்தாம் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஜீவ நாடி. ஒரு இலக்கியப் பிரதியை வாசித்து அதனை ஆரோக்யமான விவாதங்களுக்குட்படுத்துவதன் மூலம்தான் இலக்கியத்தின் அடுத்த கட்ட நகர்வைச் சாத்தியப்படுத்த முடியும். தமிழில் இயக்க ரீதியான இலக்கியச் செயபாடுகள் சங்ககாலந்தொட்டே மரபாகத் தொடர்ந்து வருகிறது. இம்மரபில், முழுவதும் வாசகர்களால் அதுவும் இளைஞர்களால் மட்டுமே முன்னெடுக்கப்படும் அமைப்புகளில் ‘வாசகசாலை’ இலக்கிய அமைப்பு குறிப்பிடத்தக்கது. மாதந்தோறும் இலக்கிய விமர்சனக் கூட்டம், கதையாடல், விருது வழங்கல் என இந்த இளைஞர்களின் கருத்தாக்கம் மிகுந்த செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது.
வாசகசாலை இலக்கியக் கூட்டத்தில் படைப்பாளி பிரதான விருந்தினர். வாசகசாலையின் பிதாமகர் ஒருவர் துவக்க உரை நிகழ்த்தி நூலையும், ஆசிரியரையும் அறிமுகப்படுத்திவிட வேண்டும். வாசகர் பார்வை என்று பேச பிரியப்படும் எவரொருவரையும் ஓர் ஆண், ஒரு பெண் என்கிற ரீதியில் தீர்மானித்து, நிர்ணயம் செய்துவிட வேண்டும். பிறகு அப்படைப்பை வாசித்துப் பேச விருப்பமுள்ள இலக்கிய ஆளுமைகளை அழைத்து பேருரை ஆற்றச் செய்ய வேண்டும். ஆசிரியரின் ஏற்புரை முடிந்ததும், கலந்து கொண்ட வாசகர்களை வைத்து விமர்சனங்கள், கேள்விகள் கேட்கச் செய்ய வேண்டும். இப்படித்தான் தொடங்கியது வாசகசாலையின் ஆரம்பம்.
இயங்கத் தொடங்கிய மூன்றாண்டுகளில் கடந்து வந்த பாதையில் ஒவ்வொரு அடியிலும் முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கும் வாசகசாலையின் அடுத்த நகர்வு தான் இந்த வாசகசாலை முப்பெரும் விழா- 2016.
விழாவில் வாசகசாலை மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்ட இளம் தமிழ் படைப்பாளிகளுக்கு இந்த ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு எனும் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப் பட உள்ளன. தஞ்சைப் பிரகாஷின் ‘மிஷன் தெரு’ நூல் வெளியீடும் நடைபெறவிருக்கிறது.

தலைமை: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
முன்னிலை: இயக்குநர் பா.ரஞ்சித்
இடம்: வினோபா அரங்கம், தக்கர் பாபா வளாகம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை.
நேரம்: மாலை 5 மணி முதல்...
இந்நிகழ்வில் ஆர்வமுள்ள படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள் அனைவருமே விழாவில் பங்கேற்று இம்மாமெரும் நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுமென்பது வாசகசாலை வட்டத்தின் மனமுவந்த விருப்பம்.
இலக்கியத்தின்பால் படைப்பாளிகளாலும், நண்பர்களாலும், விழா சிறக்க வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூருக்குள்பட்ட குமந்தாபுரம் வாக்குச்சாவடியில் 85 டோக்கன்கள் வழங்கல்

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவு

ஆலங்குளத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


