நாம் எப்போது வெள்ளைச் சர்க்கரையை சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றுதான், நமது அடிப்படை உணவான அரிசியே நமக்கு எதிராக மாறியது.
வெள்ளைச் சர்க்கரையால் ஏற்படும் நீரிழிவு நோய், பல்வேறு நோய்களுக்கு வாசலாகவும் மாறி, ஒட்டுமொத்த இந்தியர்களையும் இன்று நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆனால், நாம் எந்த வகையிலும் ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாத அளவுக்கு சர்க்கரை, நமது உணவுகளில் கலந்து விட்டிருக்கிறது.
வரும் புத்தாண்டிலாவது, இந்த சல்ஃபர் கலந்த சர்க்கரைக்கு நாம் விடை கொடுப்போம். சர்க்கரையை சுத்தப்படுத்த அல்லது வெள்ளையாக்கப் பயன்படும் ஆசிட்தான் சல்ஃபர். ஆனால் தற்போது சல்ஃபர் கலந்து சுத்திகரிக்கப்படாத, சல்ஃபர் ப்ரீ சுகர் என்ற பெயரில் சர்க்கரை விற்பனைக்கு வருகிறது.
இந்த சர்க்கரையை சல்ஃபருக்கு பதிலாக பாஸ்பரிக் ஆசிட் மற்றும் பாஸ்பேட் உப்பு கலந்து சுத்தப்படுத்துவார்கள். இது ஒரு மிகச் சிறந்த மாற்று வழியாகவும், மேம்படுத்தப்பட்ட வழிமுறையாகவும் மாறி வருகிறது. அது மட்டுமல்லாமல் இது உடல் நலத்துக்கு ஏற்றதாகவும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகவும் உள்ளது.
அதே சமயம், நாம் சாப்பிடும் உணவிலும் இந்த சல்ஃபர் உள்ளது. முட்டை, சீஸ், தானியங்கள், பால் மற்றும் இறைச்சியிலும் இந்த சல்ஃபர் இருக்கிறது. ஆனால், இது நமது உடலுக்குத் தேவையானதாகவே உள்ளது. ஆனால், சர்க்கரையில் கலக்கப்படும் சல்ஃபர் ஒரு ரசாயனமாக பயன்படுவதால், அது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


