கேரட் அல்வா சாப்பிட்டு இருப்போம். ரவா கேசரியும் பலமுறை சுவைத்திருப்போம். இதென்ன கேரட் கேசரி? குழந்தைகளை கேரட் சாப்பிட வைக்கும் ஒரு அம்மா கண்டுபிடித்த ரெசிபியாகத் தான் இது இருக்கும். கேரட்டை துருவி அதை தோசை மாவில் போட்டு கேரட் தோசை என்று கொடுத்தால், சில பிள்ளைகள் கவனமாக கேரட்டை நீக்கிவிட்டு தோசையை சாப்பிடும் கலையை கற்றுக் கொள்கிறார்கள். கேரட் கண்ணுக்கு நல்லது என்று பொதுபுத்தியிலிருந்து ஏதாவது சொல்வீர்கள் என்றால், எவன் சொன்னான் அவனை முதல்ல வரச் சொல்லு என்று வியாக்யானம் படிப்பார்கள். பேசாமல் அவர்களுக்குப் பிடித்த வகையில் இனிப்பாகவே கொடுத்துவிட்டால் வாதம் செய்யாமல் சாப்பிட்டுவிடுவார்கள். இது ஒரு எளிமையான ரெசிபி. முயற்சித்துப் பாருங்கள் அதன் பின் அடிக்கடி கேரட் கேசரியை நீங்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள்.

தேவையானவை:
ரவை - 1/2 கப்
கேரட் விழுது - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
முந்திரி, பிஸ்தா, பாதம் - தேவைக்கேற்ப
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - 1/4 கப்

செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய்யை விட்டு லேசாகச் சூடாக்கவும்.
முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புக்களை சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையை வறுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும்.
பின்னர் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கேசரியைச் சமமாக பரப்பி, சதுரமாக அல்லது டயமெண்ட் ஷேப்பில் வெட்டி எடுக்கவும்.
சுவையான கேரட் கேசரி தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


