உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம்.
தேவையான பொருட்கள் :
பேபி பொட்டேடோ - 200 கிராம்
குடை மிளகாய் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு - 10 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 10 கிராம்
தக்காளி - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
தக்காளி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை சதுரமாக வெட்டிகொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பேபி பொட்டேடோவை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் பேபி பொட்டேடோவை சேர்த்து பிசறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
அனைத்தும் சிறிது வதங்கியதும் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக பொரித்த உருளை, தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் சைட் டிஷ் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


