ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

டைஜீன் மோர்!

அஜீரணத்துக்கு ஜெலூசில், டைஜீன் போன்ற மாத்திரைகளையும், டானிக்குகளையும் விழுங்குவதைக் காட்டிலும். இந்த பஞ்ச தீபாக்னி மோர் செய்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஜில்லென்று அருந்தலாமே!

News image
Updated On :7 நவம்பர் 2016, 6:17 am

தேவையான பொருட்கள்:
ஓமம்: 100 கிராம்
சீரகம்: 10 கிராம்
மிளகு: 10 கிராம்
சுக்கு: 10 கிராம்
பெருங்காயத்தூள்: 2 சிட்டிகை
மோர்: 1 டம்ளர்

செய்முறை:

மேலே சொல்லப்பட்ட அளவுகளில் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, அவற்றை லேசாக வாசம் வரும் வரையில் வறுக்கவும், வறுத்த மசாலாப் பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்போது பஞ்ச தீபாக்னி பொடி தயார். இந்தப் பொடியை ஒரு டம்ளர் மோரில் இரண்டு டீஸ்பூன் கலந்து தினமும் அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நம்மை எட்டிக் கூடப் பாராமல் செய்து விடலாம். 

பலன்கள்:

மேலே சொல்லப்பட்ட ஐந்து மூலிகை மசாலா பொருட்களிலுமே ஜீரணத்தை ஊக்குவிக்கும் மூலக்கூறுகள் அதிகம் உண்டு. எனவே இந்தப் பொருட்களை மோருடன் கலந்து எடுத்துக் கொள்ளும் போது வாயுத் தொல்லை அகற்றப்பட்டு, வயிற்று உபாதைகள் நீங்கி, இரைப்பையின் ஜீரணத்தன்மை அதிகரிக்கிறது. இந்த பானம் இயற்கை மூலிகைப் பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்படுவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. அஜீரணத்துக்கு ஜெலூசில், டைஜீன் போன்ற மாத்திரைகளையும், டானிக்குகளையும் விழுங்குவதைக் காட்டிலும். இந்த பஞ்ச தீபாக்னி மோர் செய்து பத்து நிமிடம் குளிர் சாதனப்பெட்டியில் வைத்தெடுத்து இயற்கை மூலிகைக் குளிர்பானமாக இதையே அருந்தலாமே!  

’பஞ்ச தீபாக்னி மோர்’ என்று சொன்னால் ஐயே! இதென்னது இது? ’பஞ்ச கவ்யம்’ மாதிரி?! என்று எதையாவது கற்பனை பண்ணிக் கொண்டு சாப்பிடக் கஷ்டப் படுபவர்களுக்கு பானத்தின் பெயரை மாற்றி ’டைஜீன் மோர்’ என்று புதுப் பெயர் வைத்து குடிக்கத் தர வேண்டியது தான். பெயரா முக்கியம்? பலன் தான் முக்கியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.