இரண்டு நாட்களுக்கு முன்பு முகப்பேர் நீல்கிரீஸ் முகப்பில் இருக்கும் அருணா சூப் ஷாப்பில் அருமையான மஷ்ரூம் சூப் சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலமுறை பயணித்துக் கொண்டிருக்கும் சாலை தான். ஆனால் இதுவரை அங்கே சூப் சாப்பிட வேண்டும் என்று தோன்றியதில்லை. மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரத்தின் லேசான பசியுணர்வை வேறெதைக் கொண்டும் திருப்தி படுத்தி விட முடியாது எனத் தோன்றியதால், வீட்டிற்குப் போய் இரவு உணவைத் தொடங்குவதற்கு முன்பான ஸ்டார்ட்டராக இருக்கட்டும் என்று ஆளுக்கு ஒரு சூப் வாங்கிக் கொண்டு, இருவர் மட்டுமே அமர இடமிருந்த நீல்கிரீஸின் நீளமான படிகளில் உட்கார்ந்து சாலையெங்கும் விரையும் வாகனங்களின் ‘ஒளியும், ஒலியும்’ ரசித்துக் கொண்டே ருசித்து சாப்பிடத் தொடங்கினோம். எனக்கு மஷ்ரூம் சூப், கணவருக்கு வாழைத்தண்டு சூப். இரண்டுமே அருமையான சுவை. சூப்பில் தாராளமாக கார்ன் சிப்ஸ் தூவித் தருகிறார்கள். மிளகுத் தூளும், உப்பும் சரிநிகர் சமானமாக ஆட்சி செய்தது, சூப்பில் சூடும் பின் மாலை நேரத்துக்குப் பக்காவாக பொருந்தும் நிறை சூடு. ஆகையால் சொல்லத்தக்க குறையொன்றுமில்லை.
ஒரு சூப் விலை 20 ரூபாய். சூப் அளவும் நுகர்வோர் திருப்திக்கு ஏற்றவாறு நிறைவாகவே இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை ருசிக்க முயற்சித்துப் பாருங்கள்.
வெஜிடபிள் சூப்
டொமட்டோ சூப்
வாழைத்தண்டு சூப்
மஷ்ரூம் சூப்...
உள்ளிட்ட 6 விதமான சூப்கள் அங்கே கிடைக்கின்றன.
கமிஷனர் ஜார்ஜ் வீடு நீல்கிரீஸ் எதிரில் இருப்பதால் கடமையுணர்வு மிக்க போக்குவரத்து காவலர்கள் பார்க்கிங்கில் தான் கொஞ்சம் கெடுபிடி காட்டுகிறார்கள். மற்றபடி சூப்புக்காக அந்தக் கெடுபிடியைத் தாங்குவதில் அப்படியொன்றும் சிரமமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவு

ஆலங்குளத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


