தேவையான பொருட்கள்:
நீளமான பாகற்காய் - 2
வேகவைத்த கொண்டக்கடலை - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு -1/4 கப்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
தனியாத் தூள் -1 /4 டீ ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
தனியா -1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் -1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் -6
தேங்காய் துருவல் -1/2 கப்
தாளிக்க:
கடுகு -1 /2 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு -1 /2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
எப்படிச் செய்வது பாகற்காய் பிட்லை ?
முதலில் கடலைப் பருப்பு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு மூன்றையும் நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்துக் கரைத்து புளிக்கரைசல் தயார் செய்து கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை சொர சொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு பிட்லை செய்ய மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிய பாகற்காயை மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்த விழுது ,உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்,குழம்பு நன்றாகக் கொதித்து வந்ததும் வேக வைத்த பாகற்காய்,வேக வைத்த கொண்டைக்கடலை,துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு மூன்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி கடுகு உளுந்தப் பருப்பு ,கருவேப்பிலை தாளிதம் செய்தால் சுவையான பாகற்காய் பிட்லை தயார்.
பாகற்காயின் கசப்பு பிடிக்காதவர்களுக்கு பொருத்தமான ரெசிப்பி இது ,மேலும் கொண்டைக் கடலை,துவரம் பருப்பு ,கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் சேர்ப்பதால் பாகற்காயின் கசப்பு குறைவதோடு புரதச் சத்தும் கிடைக்கும். அலோபதி மருந்து எடுத்துக் கொள்ளும் போது பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் மருந்தின் சக்தியை முறிக்கும் தன்மை பாகற்காய்க்கு உண்டு.
பாகற்காயில் என்ன இருக்கு?
பாலிபெப்டைடுகள் என்று சொல்லப் படுகிற இன்சுலின் சுரப்பை அதிகப் படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது, சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று, தொற்று நோய்களைத் தடுக்கும், கிருமிகளை அழிக்கும், வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


