கருப்புதான் இந்த மண்ணின் நிறம் என்றாலும் சிவப்புக்கு கொடி பிடிப்பவர்கள்தான் அனேகம். எந்த நிறமாக இருந்தாலும் பளிச்சென்று இருப்பதுதான் அழகு. பளிச் அழகைப் பெற சில டிப்ஸ் இதோ :

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் கூடிய அழகை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும். சிறிது நேரம் இந்த பேக்கை முகத்தில் வைத்திருந்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். தொடர்ந்து இதனை செய்துவந்தால் சருமம் பொலிவடையும்.

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் இரண்டு, உலர் திராட்சை 10 இவற்றை வெந்நீரில் ஊற வைக்கவும். அதன் பின் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு ஃபேஸ் பேக்காகப் போட்டுக் சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணையை கலந்து முகம் மற்றும் கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். நன்றாக ஊறிய பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமை மறைந்து விடும்.

சிலருக்கு முகம் பளிச்சென்று இருந்தாலும் கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றியிருக்கும். இரவில் சரியான தூக்கம் இல்லாமல் போனால் கண்களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது உறக்கம் அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் தேவை.

இதனை போக்க, முதலில் வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து சிறிது நேரம் படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும்.

தக்காளி, ஆப்பிள், மற்றும் தர்பூசணி ஆகியவற்றின் விழுதினை சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி, பொலிவுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


