டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வெள்ளிப் பொருள்கள் பளபளக்க இந்த பேஸ்ட் போதும்! வீட்டிலேயே செய்யலாம்!!

வெள்ளி நகைகள், பொருள்கள் பளபளக்க வீட்டிலேயே பேஸ்ட் செய்யலாம்

News image
வெள்ளி கொலுசு- DPS
Updated On :19 பிப்ரவரி 2026, 5:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

கடலை மாவும், எலுமிச்சைச் சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாகும்.

பருப்பை வேக வைக்கும்போது சிறிது எண்ணெய் விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

வெங்காயத்தை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பிறகு தோல் களைந்து நறுக்கினால் கண்ணிலிருந்து நீர் வராது.

குக்கர் வெயிட்டின் மீது தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிட்டைக் கழுவக் கூடாது. கீழே போடவும் கூடாது.

முகம் பார்க்கும் கண்ணாடியை நாளிதழ் காகிதத்தால் துடைத்தால் பளபளப்பாகும்.

எண்ணெய் மற்றும் நெய் படிந்த பாத்திரங்களை முதலில் காகிதத்தால் துடைத்த பிறகு சோப்பினால் கழுவினால் எளிதாக சுத்தமாகும்.

உப்பு கலந்த நீரில் துணியை முக்கி வைத்து பத்து நிமிடத்துக்குப் பிறகு அலசினால் காப்பிக் கறை மறைந்து போகும்.

முட்டைக் கோஸ் சமைக்கும்போது எலுமிச்சை சாறு சிறிது சேர்த்தால் கோஸ் வாசனை வராது.

சாதம் செய்யும்போது இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டால் பிரியாணி கட்டி தட்டிப் போகாமல் இருக்கும்.

வெங்காயத் துண்டுகளை உப்பு தடவி பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்தால் நன்றாக வறுபடும்.

பாயசம் வைக்கும்போது பாசிப்பருப்போடு அரிசியோ, ஜவ்வரிசியோ நன்றாக வேக வைத்த பிறகுதான் இனிப்பு சேர்க்க வேண்டும் .

முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால் தேங்காய் எண்ணெய் காராமல் இருக்கும்.

உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேஜையில் ஈக்கள் தொல்லை குறையும்.

கொதிநீரில் முக்கி எடுத்தால் போதும் தக்காளியின் தோல் எளிதாக வந்துவிடும்.

சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து கொதிக்க வைத்தால் நெய் கெடாமலிருக்கும்.

உப்பு கலந்த குளிர்ந்த நீரில் துணியை முக்கி வைத்த பிறகு சோப்பு உபயோகித்தால் துணி மீது படிந்த வாழைக்கறை மறையும்.

- நெ.இராமன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.