/

மழை சீசனில் தலைமுடி பராமரிப்பு!

மழைக்காலம் வந்தாலே பெண்களுக்கு தலைமுடி உதிர்தல், அரிப்பு போன்ற பிரச்னைகளின் பயம் கூடவே

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:36 pm

உமா ஷக்தி.

மழைக்காலம் வந்தாலே பெண்களுக்கு தலைமுடி உதிர்தல், சிடுக்கு, அரிப்பு போன்ற பிரச்னைகளின் பயம் கூடவே வரும். இந்த சீசனில் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு சற்று அதிகமாக இருந்தாலும் கவலைப்படவேண்டாம். சீசன் மாறும் போது தானே சரியாகிவிடும். ஆனாலும் இதை அலட்சியப்படுத்தாமல் தலைமுடி பராமரிப்பில் சற்று கவனம் செலுத்துவதும் முக்கியம் என்கிறார் ஒரு நிபுணர்.

Story image

கெராஸ்டஸே ஹேர் கேரின் மேலாளர் அஷிமா கபூர் தலைமுடி பராமரிப்பைக் குறித்து சில பயனுள்ள டிப்ஸ் தருகிறார்.

வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ எளிமையான அதே சமயம் குறைந்த நேரத்தில் தலைமுடியை பராமரிப்பில் வைத்திருக்க வேண்டுமென்றால் ஆன்டி ஆக்ஸிடெண்ட் க்ரீம் மற்றும் சீரம் இரண்டையும் தலைப்பகுதியில் தேய்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவிதமான சீதோஷ்ண நிலையிலும் இது பயன் தரும்.

உங்கள் தலைமுடி என்ன வகை என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதன் பின் அதற்கேற்ற வாரம் ஒரு முறை எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் தலைமுடி பளபளப்புடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். தவிர தலையில் பாக்டீரியல் அல்லது ஃபங்கல் அல்லது பொடுகு பிரச்னைகள் இருந்தால் சரியாகிவிடும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று தடவை அதிக கெமிக்கல் கலக்காத மைல்ட் ஷாம்புவைப் பயன்படுத்தி சுத்தமான நீரில் தலைமுடியை நன்றாக அலச வேண்டும். க்ரீம் வகை ஷாம்புவைத் தவிர்த்து க்ளாரிஃபையிங் ஷாம்புவைப் பயன்படுத்தலாம்.

Story image

மழையில் நனைந்த பின் தலை துடைக்காமல் ஈரத்துடன் இருந்துவிட்டால் தலை அரிக்கும். பாக்டீரியா, ஃபங்கல் தொற்று அல்லது பொடுகுப் பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே தலையை நெடுநேரம் ஈரமாக வைத்திருக்கலாம், நன்றாகத் துவட்டியபின் உலர வைக்க வேண்டும்.

இந்த சீசனில் ஷாம்பு பயன்படுத்தியபின் தரமான கண்டிஷனரும் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரைத் தலைப்பகுதியில் போடக்கூடாது. முடியில் மட்டுமே தடவ வேண்டும்.

தலை குளித்தால் முடியை நன்றாக காய வைத்தபின்னர் தான் வெளியில் செல்ல வேண்டும். தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பைப் பயன்படுத்த வேண்டாம்.

தலைமுடி உதிர்வுக்குக் மற்றொரு காரணம் முடி வறண்டு ஈரப்பதம் குறைந்து போவதும் ஒரு காரணம். எனவே தலையின் இயற்கையான ஈரப்பதம் கெடாமல் அதே சமயம் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க அதற்கேற்ற தரமான எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.