பத்து நாளில் உடல் எடை குறைக்க எளிய வழிமுறைகள்
உங்களுக்கு பத்தே நாட்களில் உடல் எடையை குறைக்க விருப்பமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்


உங்களுக்கு பத்தே நாட்களில் உடல் எடையை குறைக்க விருப்பமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவு தான். சரியான உணவை உட்கொள்ள வேண்டும். தேவையான உடல்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரோக்யமான வழிமுறைகளை நேர்த்தியாய் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி மட்டும் செய்துவிட்டால் உங்கள் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள எடை தானாக குறைந்து சரியான எடைக்கு வந்து விடுவீர்கள் என்பது சர்வநிச்சயம்.
மனீஷ் தாகூர் உடல் பயிற்சி நிலையம் நடத்திக்கொண்டிருப்பவர். அவர் கூறும் சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
உணவு கட்டுப்பாடு. இடுப்பு பகுதி அளவை சரி செய்ய. இதில் முக்கியமாய் கடைப்பிடிக்க வேண்டிய விசயம் குறைந்த கலோரி (சக்தி) உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது. நாம் மூன்று வேளை வயிறு நிரம்ப சாப்பிடுவதை தவிர்த்து, ஐந்து முறை அளவாக அரை வயிற்றுக்கு சாப்பிடுவது இந்த விஷயத்தில் பலன் கொடுக்கும். சிறுகசிறுக சாப்பிடுகிற அந்த உணவில் சரிவிகித உணவாய் போதிய புரதமும் (புரோட்டீன்) மற்றும் நல்ல கொழுப்பும் (HDL- மற்றும் ஒமேகா 3, ஒமேகா 6, ஒமேகா 9 மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்) கலோரி குறைந்த மாவுச்சத்தும் (கார்போஹைட்ரேட்) போன்றவை சரிவிகித்த்தில் உணவில் இருக்கிறாற்போல் அட்டவணை தயாரித்து உண்ணலாம்.
இதில் பச்சை காய்கறிகள் முக்கிய பங்காற்றுவதால் அதுவும் அவசியம். அவற்றில் நார் சத்தும், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டும் அதிகமாக இருக்கிறது.

தலை மற்றும் தோள்பட்டைக்கான உடற்பயிற்சி - இதில் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை நேராக மேலே தூக்கிக்கொண்டு வந்து பின்னால் நீட்டியிருக்கும் கை முட்டியில் கால் முட்டி தொடும்படி செய்கிறபோது தலை முதல் கால் வரை தசைகள் பயிற்சியின் பலனை பெறுகின்றன. மேலும் உட்கார்ந்து எழுந்திரிக்கிற சிட்-அப்ஸ் பயிற்சியும் மேற்கொள்வது தேவையற்ற எடையை குறைக்க மிகவும் உதவும்.
கைகால்களுக்கான பயிற்சி - மல்லாந்து படுத்துக்கொண்டு, தலையையும், தோள்பட்டை பகுதியை மட்டும் அரை அடி தூரத்திற்கு மேலே உயர்த்தி அந்த நிலையிலேயே மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும். இந்த பயிற்சி மேற்கொண்டதும் வயிற்று தசைகள் இறுக்கிப் பிடிப்பதை உணர முடியும். இந்த பயிற்சி மேற்கொள்கிற போது கைகளை தலைக்கு பின்னால் வைத்து முட்டுக் கொடுக்க்க்கூடாத.
நடை பயிற்சி - மற்றும் எளிய பயிற்சி முறைகள் நல்லது. முன் கைகளை நீட்டி மடக்குவது, கைகளை முழுதாக எல்லா திசைகளிலும் உயர்த்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது, அதேபோல கால்களுக்கு, பின் கை கால்கள் சேர்த்து, என்று உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்கிற பயிற்சி அவசியம்.
இடுப்பிற்கான பயிற்சி - நாம் மேற்படி சொல்லப்பட்ட பயிற்சிகளை செய்வதால் தசைகள் வலிமை பெறுமே தவிர, அதோடு ஸ்கிப்பிங், ஓட்டம், வேகநடைப்பயிற்சி போன்றவற்றையும் சேர்ந்து செய்கிற போது தான் இடுப்பில் உள்ள தேவைக்கதிகமான கொழுப்பு கரைந்து இடுப்பு வலிமை பெறுவதோடு, சரியான அளவை படிப்படியாக எட்டும்.

ஓட்டம் அல்லது வேகநடை என்கிற ஏரோபிக் பயிற்சிகள் பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற முறை. இதன் மூலம் எலும்பு வலுப்பெறும். இதயம் ஆரோக்யமாகும். உடல் எடை குறைந்து தோற்றம் கச்சிதமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...